Last Updated:
2,000 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கும் கல்லணை திருச்சி மக்களின் ஃபேவரைட் வீக்கெண்ட் ஸ்பாட் ஆக விளங்குகின்றது.
கல்லையும் மண்ணையும் கொண்டு கட்டப்பட்ட அணை 2,000 ஆண்டுகளாகியும் காவிரியின் சீற்றத்தைத் தாங்கும் அணையாக, கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட அணையாகக் கல்லணை உள்ளது.
வரலாற்றுக்கும் புராணத்திற்கும் பெயர் பெற்ற திருச்சியில் உலகத்தின் பழமையான அணையாகவும் தமிழர்களின் தொழில்நுட்பம் மற்றும் நீர் பாசனத்தின் யுக்தியை வெளிக்காட்டும் வகையாக உள்ளது கல்லணை. திருச்சியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தோகூர் கிராமத்தில் கல்லணை அமைந்துள்ளது.
கரிகாலனின் ஆட்சிக்காலத்தில் காவிரி மழைக்காலத்தில் அதிக வெல்லும், கோடைக் காலத்தில் வறண்ட நிலத்தையும் ஏற்படுத்தியது. வெள்ளம் ஏற்படுவதை நிறுத்தவும் வறட்சிக் காலங்களில் நீரைச் சேமித்து வைத்து நீர் பாசனத்திற்கு உதவும் கரிகாலன் தீட்டிய திட்டமே கல்லணை அணைக்கட்டும் திட்டம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருச்சி பஞ்சப்பூரில் ரெடியாகும் புதிய பேருந்து முனையம்… திறப்பு எப்போது தெரியுமா..?
வெறும் கல்லையும் களிமண்ணாலான பசையும் கொண்டு கல்லனைக் கட்டப்பட்டது என்பதை மிக ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஒரு கல் மீது ஒரு கல்லை அடுக்கி இரு கற்கையிலேயே நீரினால் கூட அரிக்க முடியாத அளவிற்குக் களிமண்ணால் கொண்ட பசையை வைத்துக் கட்டியதே கல்லணை அணை.
நீர்ப்பாசனக் காலங்களில் வெண்ணாறு, புது ஆறு வழியாகவும் வெள்ளக் காலங்களில் கொள்ளிடம் வழியாகவும் காவேரி ஆறு கல்லணையிலிருந்து திறக்கப்படுகிறது. இதனால் பல லட்ச டெல்டா நிலங்கள் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படும் சர் ஆத்தர் காட்டன் பல ஆண்டுகளாகக் கல்லணையை ஆராய்ந்ததோடு கல்லணையின் அடிப்பகுதியைச் சீரமைத்து வந்தார். ஆராய்ச்சியின் போது கல்லணை அடிமட்டத்தைப் பார்த்த வியந்த அவர், தமிழர்களின் அணைக்கட்டு திறமையும் நீர் பாசனம் வேளாண்மையையும் கண்டு வியந்து கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட்டு என்ற பெயரையும் வைத்தார்.
இதையும் படிங்க: சுகரை கட்டுப்படுத்தும் சூப்பரான காய்… இந்தா ஆரம்பமாகிட்டுல அதலக்காய் சீசன்…
தமிழர்களின் வியக்க வைக்கும் கட்டுமானத்திறனுக்குச் சான்றாக விளங்கும் இந்த கல்லணைக்குச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர். மேலும் திருச்சி மக்களின் ஃபேவரைட் வீக்கெண்ட் ஸ்பாட் ஆகவும் இந்த கல்லணை விளங்குகின்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Tiruchirappalli,Tamil Nadu
November 11, 2024 12:45 PM IST
செல்லுமிடமெல்லாம் சோலையாக்கும் பொன்னி நதி… கண்ணார காண கல்லணைக்கு படையெடுக்கும் மக்கள்…
