Last Updated:

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் திருவெள்ளறை புண்டரிகாட்சப் பெருமாள் கோவில் ஸ்ரீரங்கத்தை விட பழமையான கோவில் ஆகும்.

X

பூலோக

பூலோக வைகுண்டம் எனும் பெருமை பெற்ற தலம்… ஸ்ரீரங்கத்தையும் விட பழமையான திருவெள்ளறை…

வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்து சொர்க்க வாசல் திறப்பதைப் பார்ப்பது மோட்சம் அளிக்கும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. மாதத்திற்கு 2 ஏகாதசிகள் வீதம் வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றது, ஆனால் இந்த வைகுண்ட ஏகாதசி மட்டும் தான் சிறப்புப் பெற்றதாக விளங்குகிறது.

ஆனால் எல்லோராலும் வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசலைக் காண முடியாது. ஆனால் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் வந்து தரிசனம் செய்யும் மக்களுக்கு மோட்சம் அளிக்கும் ஒரு திருத்தலம் திருச்சியில் உள்ளது. அது தான் திருவெள்ளறையில் அமைந்துள்ள புண்டரீகாட்சப் பெருமாள் கோவில்.

மனிதன் இறந்த பிறகு அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தான் பலன் கிடைக்குமாம். அப்படிப் பாவ, புண்ணியம் குறித்த கணக்கின் போது பூலோக வைகுண்டமான திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாளைத் தரிசித்தது உண்டா என்று கேட்கப்படுமாம். அவ்வாறு தரிசித்துள்ளதாகக் கூறுபவர்கள் பாவம் நீங்கு வைகுண்டத்திற்குச் செல்வார்கள் என இந்தக் கோவிலின் சிறப்பு குறித்துக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பெண்களை பீதிக்குள்ளாக்கும் மார்பக புற்றுநோய்.. உங்க கிட்சன்லயே இருக்கு தடுப்பு மருந்து…

இதனாலே, திருச்சியிலிருந்து துறையூருக்குச் செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவெள்ளறைக்கு ஏராளமான மக்கள் தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். 1200 ஆண்டு பழமையான இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 4வது தலமாகும். 50 அடி உயரத்தில் வெண்மையான பாறைகளான குன்றின் மீது இத்தளம் உள்ளதால் வெள்ளறை என்று பெயர் பெற்றதெனவும், இந்தத் தலத்தினாலே இந்த ஊர் திருவெள்ளறை என அழைக்கப்படுகிறது.

இந்த கோவில் சிபி மன்னன் காலத்தில் கட்டப்பட்டது என கூறப்படுகிறது. மேலும், பல்லவ மன்னன் தந்திவர்மன் கால கல்வெட்டு தொடங்கி விஜயநகர அரசர்கள் காலத்துக் கல்வெட்டுகள் வரை இந்த ஆலயத்தின் பெருமைகளைக் கூறுகின்றன.

இந்த கோவிலில் சூரிய, சந்திரா், கருடனும் ஆதிசேஷன் பெருமாளுக்கு அருகே நின்ற கோலத்தில் வணங்கிக் கொண்டிருக்கின்றனா். பெருமாளின் திருவடியில் மாா்க்கண்டேயா் தவம் செய்யும் கோலத்தில் அமா்ந்துள்ளாா். எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு உத்தராயண வாசல் என்னும் வடக்கு வாசல் மற்றும் தட்சிணாய வாசல் என்னும் தெற்கு வாசல் என இரு வாசல்கள் உண்டு.

இதையும் படிங்க: அசோக ஸ்தூபி இல்லாத இந்திய ரூபாய்… உலக நாடுகளின் பணமெல்லாம் கூட இங்கே இருக்கு…

தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சினாய வாசல் வழியாக பெருமாளை தரிசிக்கப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு பெருமாளைத் தரிசிக்க 18 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்த 18 படிகள் கீதையில் உள்ள 18 அங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

பரந்து விரிந்த இந்த கோவிலில் தாயாருக்கே முதல் மரியாதை அளிக்கப்படுகிறது. எல்லா திருவிழாக்களிலும் முதலில் தாயாரின் பல்லுக்கு வந்த பிறகு தான் பெருமாளின் பல்லக்கு பின்வரும். இந்த தலத்திற்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலிருந்து, மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை தருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க


நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *