பண்டிகைக் காலங்களில் பேருந்துகளில் செல்ல மக்கள் கூட்டம் முண்டியடிக்கும் நிலையில் பேருந்து நிலையத்திற்குச் சென்று சீட் பிடிப்பதே பெரும்பாடாகிப் போய் விடுகிறது. நகரில் மக்கள் தொகையும், வானங்களின் எண்ணிக்கையும் பெருகி வரும் நிலையில் சிறந்த போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும் என்பதற்காகவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் திருச்சி, பஞ்சப்பூர் பகுதியில் பிரம்மாண்டமாகப் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
மத்தியப் பேருந்து நிலையத்துக்கு மாற்றாக இந்த பேருந்து நிலையமானது பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்தியப் பேருந்து நிலையத்தில் ஏராளமான மக்கள் கூட்டம் மற்றும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் அதிக அளவில் வந்து சென்ற காரணத்தினால், அதிகளவில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நெரிசலைத் தீர்ப்பதற்காக பஞ்சப்பூரில் மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆனது தொடங்கப்பட்டது.
இதையும் படிங்க: சுகரை கட்டுப்படுத்தும் சூப்பரான காய்… இந்தா ஆரம்பமாகிட்டுல அதலக்காய் சீசன்…
பேருந்து நிலையம் ஆனது சுமார் ரூ.349 கோடி செலவில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது மாநகராட்சி சார்பில் ரூ.50 கோடியும், தமிழக அரசு சார்பில் ரூ.140 கோடியும் தமிழக நிதி மற்றும் உள்கட்டமைப்பு துறை சார்பில் ரூ.159 கோடி கடனாகவும் பெற்று பணிகள் அனைத்தும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 65 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டதால் இதன் திறப்பு தேதியானது தள்ளிவைக்கப்பட்டு வந்தது.
இந்த பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தில் 142 நீண்ட நேரம் பேருந்துகள், 124 புறநகர் பேருந்துகள், 78 குறைந்த நேர பேருந்துகள் என ஒரே நேரத்தில் 404 பேருந்து நிறுத்துவதற்கான வசதியுள்ளது. அதேபோல், மேல்தளத்தில் 60 டவுன் பஸ் இயக்கக்கூடிய அளவுக்கு உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய பேருந்து நிலையத்தில் வணிகப் பயன்பாட்டிற்காக அங்கு 70 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பேருந்து நிலையத்தைப் பொதுமக்கள் அணுகுவதற்காகவும், இங்கிருந்து செல்வதற்காகவும் வசதி ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ ஸ்டாண்டும் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Sabarimala Special Bus: சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்… SETC வெளியிட்ட அறிவிப்பு…
மேலும் இங்கு பேருந்துகளின் வருகை, புறப்பாடு குறித்து அறிவிக்க ஸ்பீக்கர், விளம்பரம் ஒளிபரப்புவதற்கான டிஜிட்டல் திரைகள், பயணச் சீட்டு முன்பதிவு செய்வதற்கான கவுண்டர்கள் போன்ற வசதிகளும் இடம்பெறுகின்றன. மேலும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மழை நீர் வடிகால் வசதியும் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பிரம்மாண்டப் பேருந்து நிலையத்திற்கு வரும் மக்களின் வாகனங்களை நிறுத்தி வைக்க வசதியாக வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பேருந்து நிலையத்தில் ஏசி அறை போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பேருந்து முனையத்தில் சிறிய சிறிய கடைகள், உணவகங்கள், அலுவலகங்கள் மற்றும் மினி ஹால் போன்ற பணிகள் அனைத்தும் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணி விரைவில் முடியும் என்றும், பொங்கல் பண்டிகைக்கு இந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையமானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Tiruchirappalli,Tamil Nadu
November 11, 2024 10:20 AM IST
திருச்சி பஞ்சப்பூரில் ரெடியாகும் புதிய பேருந்து முனையம்… திறப்பு எப்போது தெரியுமா..?
