Last Updated:
திருச்சி மலைக்கோட்டையில் வீற்றிருக்கும் உச்சிப்பிள்ளையார் திருச்சியில் காக்கும் கடவுளாக விளங்குகிறார்.
எல்லோருக்கும் மேல ஒரு சக்தி இருக்கு, அது எல்லோரையும் மேல இருந்து கவனிச்சி பாதுகாக்கிறது என்ற எண்ணம் பொதுவாக அன்மிக் அன்பர்களிடம் இருக்கும். அப்படி உன்மையாகவே ஒரு நகரையே மேலிருந்து கவனித்து பாதுகாப்பவராக விளங்குகிறார் திருச்சியில் உள்ள மலைக்கோட்டையில் வீற்றிருக்கும் உச்சிப்பிள்ளையார்.
திருச்சியின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டை உச்சியில் இந்த உச்சிப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ளதற்கு ஒரு புராணக் கதை கூறப்படுகிறது.
இந்த உச்சி பிள்ளையார் கோவில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த கோவில் அமைந்துள்ள மலை இமயமலையை விட பழமையான மலை என்னும் சிறப்பு கொண்டதாகும்.
இதையும் படிங்க: சபரிமலை செல்லும் பக்தர்களே… இருமுடி கட்டிவிட்டு இந்த 2 விஷயத்தை செஞ்சுடாதீங்க…
மலைக்கோட்டையில் 273 அடி உயர உச்சியில் அமைந்திருப்பதால் இந்த பிள்ளையார் கோவில் உச்சிப்பிள்ளையார் கோவில் என்றானது. இந்த பிள்ளையார் கோவிலுக்குச் செல்ல பாறையின் செங்குத்தான படிகளில் சிறிய பாதை உள்ளது.
இந்த உச்சிப்பிள்ளையார் கோவிலிலிருந்து திருச்சி நகரின் அழகையும், ஸ்ரீரங்கத்தையும், காவேரி ஆற்றையும், கொள்ளிடத்தையும் காண முடியும். திருச்சியில் ஒட்டுமொத்த அழகையும் ஒரே இடத்திலிருந்து காண முடிவதால் இங்கு பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Tiruchirappalli,Tamil Nadu
November 16, 2024 9:27 AM IST
