Last Updated:
கல்லணை, கரிகால சோழனின் மணிமண்டபம் திருச்சி மக்களின் ஃபேவரைட்டான வீக்கெண்ட் ஸ்பாட் ஆக விளங்குகிறது.
திருச்சி அருகே தோகூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள கல்லணையைக் காணச் செல்லும் வழியெங்கும், பச்சைப்பசேல் என்று வயல் வெளிகள் காணப்படுகிறது. விவசாய நிலங்களைக் கண்டு மனமகிழ்ச்சியோடு சென்றால் பிரம்மாண்டமாக நிற்கிறது கல்லணை அணை. 2000 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கும் கல்லணையைக் கட்டிய இரண்டாம் கரிகால சோழனின் மணிமண்டபமும் அங்கே உள்ளது.
வார இறுதி நாட்களில் திருச்சியின் சுற்றுவட்டார மக்களுக்குப் பொழுதுபோக்கு இடமாகவும், தமிழரின் பெருமையை எடுத்துக் கூறும் இடமாகவும் கல்லணையும், கரிகாலச் சோழனின் மணிமண்டபம் உள்ளது. அழகான வெள்ளைப் பூக்கள் பூத்துக் குலுங்கப் பட்டாம்பூச்சிகளோடு தூய்மையாகக் காணப்படுகிறது கரிகாலனின் மணிமண்டபம்.
மணிமண்டபத்தின் உள்ளே சென்றாலும் பிரம்மாண்டமான யானையின் மீது கரிகாலச் சோழன் கம்பீரமாக வீற்றிருப்பது போல அமைக்கப்பட்டுள்ள சிலை அனைவரையும் வியக்க வைக்கிறது. மண்டபத்தைச் சுற்றி கரிகாலனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது ஆட்சிக் காலத்தில் கல்லணை கட்டிய கதையையும் எடுத்துரைக்கிறது அங்கிருக்கும் ஓவியங்கள்.
இதையும் படிங்க: திருச்சியை உச்சியிலிருந்து காக்கும் கணபதி… உச்சிப்பிள்ளையாரான கதை தெரியுமா…
கல்லணையைக் காண வரும் அனைவரும் கரிகால சோழனின் மணிமண்டபத்தையும் காண வருகிறார்கள். யானை மீது வீற்றிருக்கும் கரிகாலனுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். கல்லணையின் அழகை மட்டும் பார்க்காமல் கரிகாலச் சோழனின் ஆட்சிக் காலத்தைப் பற்றியும் தெரிந்து கொள்கின்றனர். குடும்பத்தோடு கல்லணைக்கு வரும் அனைவரும் கல்லணையிலிருந்து பாய்ந்து வரும் காவிரி ஆற்றில் குளிப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் விளையாடுவதற்கு ராட்டினங்களும் உள்ளது.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், “திருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்து கடந்த 3 ஆண்டுகளாக இந்த கல்லணை மற்றும் கரிகாலனின் மணிமண்டபத்திற்கு வந்து செல்வதாகவும் இந்த முறை அதிகளவு தண்ணீர் காணப்படுகிறது என்றும் அனைவரும் வந்து பார்க்க மற்றும் தெரிந்து கொள்ளவேண்டும்.
முதன் முறையாக வந்து கல்லணையைக் கண்டுகளித்தேன் என்றும் ரம்மியமாகவும், அழகாகவும், மணிமண்டபம் சென்று கரிகாலனின் வரலாற்றைத் தெரிந்து கொண்டேன்” எனத் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Tiruchirappalli,Tamil Nadu
November 16, 2024 11:07 AM IST
