Last Updated:
திருச்சி மாவட்ட நூலகத்தில் நடந்த ஓவியப் போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் மற்றும் மாவட்ட மைய நூலகர் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 57வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. நூலகத்தின் முக்கியத்துவத்தையும், நூலகத்தின் மூலம் நாம் அடையும் நன்மைகளையும் உணர்த்தும் வகையில் திருச்சியில் மாவட்ட மைய நூலகம் வளாகத்தில் வைத்து
நூலகம் என்ற தலைப்பை முதன்மையாகக் கொண்டு போட்டிகள் நடைபெற்றன.
நவம்பர் 14 முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. போட்டியின் முதல் நாளான நவ.14 அன்று குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் 1 முதல் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறிவு பூங்கா என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல பகுதிகளிலிருந்தும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மூன்று மணி நேரம் நடந்த போட்டியில் மாணவர்கள் தங்களது கற்பனைத் திறன்களை வண்ண பென்சில் உதவியுடன் ஓவியங்களாக வரைந்தனர்.
இதையும் படிங்க: ராக்கெட்டை பார்ட் பார்ட்டா பாக்கலாம்… உங்க பிரெண்ட்ஸ் கூட ஸ்பேஸ் சுத்தி பாக்கலாம்…
இதுகுறித்து போட்டியில் பங்கேற்ற மாணவி கூறுகையில், “என் பெயர் சபிதா ஃபரினா 7ஆம் வகுப்பு செயின்ட் ஜோசப் கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூலில் இருந்து வருகிறேன். நான் இந்த போட்டியில் கலந்து கொண்டு இந்த போட்டியில் அறிவு பற்றிய தலைப்பில் ஓவியம் வரைந்தேன். நான் ஜவஹர்லால் நேரு ஓவியம் வரைந்து, அதனுடன் நான் எக்ஸ்ட்ரா டாபிக்ஸ்லயும் மறைந்தேன்.
அதுல இன்னும் இன்க்ளூடிங் டாபிக்ஸ் வரைந்த நான் சொந்தமாகவே வரைந்தேன். எனக்கு இது பெரிய வாய்ப்பு தான் என்னை தேர்வு செய்த ஸ்கூலுக்கும், லைப்ரரியனுக்கும் நன்றி கூறுகிறேன்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Tiruchirappalli,Tamil Nadu
November 15, 2024 6:18 PM IST
