Last Updated:
ஸ்ரீரங்கத்தில் அரங்க நாயகி சொர்க்கவாசலைப் பார்த்த விதத்தில் தாங்களும் காண வேண்டும் என பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் திருச்சியில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது. திருச்சிக்கு வருகை தரும் அனைத்து மக்களும் ஸ்ரீரங்கம் கட்டாயம் செல்வர்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்ரீரங்கத்திற்கு ரங்கநாதரின் தரிசனம் பெற வருகை தருகின்றனர். மேலும் இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா உலகப் புகழ்பெற்றது. வைகுண்ட ஏகாதசியின் சிகர நிகழ்வான சொர்க்க வாசல் என்னும் பரமபத வாசல் திறப்பைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தருவார்கள்.
அந்தவகையில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான பணிகள் நவ.14ஆம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்வுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தற்போதிருந்தே ஸ்ரீரங்கத்திற்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இதையும் படிங்க: கணவன் – மனைவி ஒன்னா முன்னேறுவதே அழகானது தான்… வாப்பிள்ஸ் விற்பனையில் அசத்தும் கப்பிள்ஸ்…
இந்த பரமபத வாசல் திறப்பைக் காணும் பக்தர்கள் மோட்சம் பெறுவார்கள் எனக் கருதப்படுகிறது. மேலும் இந்த பரமபத வாசல் வழியாகத் தான் அரங்கநாதர் சொர்க்கத்திலிருந்து வருகை தருவார் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
பரமபத வாசலைத் தாயார் அரங்கநாயகி ஒரு தூணின்கீழ் கை வைத்து சொர்க்கவாசல் திறந்து இருப்பதைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
இன்றளவிலும் ஸ்ரீரங்கம் கோவில் சென்றால் அம்மன் சன்னதி செல்லும் வழியில் உள்ள அந்த தூணின் கீழ் கை வைத்து சொர்க்கவாசல் திறந்து இருப்பது தெரிகிறதா என்று பக்தர்கள் காண்பதைப் பார்க்க முடியும்.
Also Read: இந்த ராசியினருக்கு இன்று வெற்றிகரமான நாளாக அமையும்..! நவம்பர் 21
ஸ்ரீரங்கம் கோவில் வருபவர்கள் இந்த தூணின் கீழ் கைவைத்து சொர்க்க வாசலைப் பார்த்தால் அது திறந்திருப்பதாகத் தெரியும் என்று கூறுகின்றனர். இதைப் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை முயற்சி செய்து பார்க்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Tiruchirappalli,Tamil Nadu
November 21, 2024 11:24 AM IST
