இதனால் திருச்சி செழிப்பான வரலாற்றைத் தன்னுள் கொண்டுள்ளதாகவும் பல புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களைக் கொண்டுள்ள மண்ணாகவும் விளங்குகிறது. பல சிறப்புகளைத் தன்னுள் கொண்டிருக்கும் திருச்சிக்கும் வரும் மக்கள் கட்டாயம் பார்த்துச் செல்லும் 5 இடங்கள் குறித்துப் பார்க்கலாம்…

திருச்சி மலைக்கோட்டை: திருச்சியின் அடையாளச் சின்னமாக விளங்கும் இந்த மலைக்கோட்டையானது இளம் மடிப்புமலையான இமயமலையை விட பழமையான மலையாகும். இந்த மலையின் நடுவே தாயுமானவர் கோவிலும் மலையின் உச்சியில், உச்சிப்பிள்ளையார் கோவிலும் உள்ளது.

இதையும் படிங்க: திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் பணிகள் விறுவிறு… திறப்பு எப்போது தெரியுமா…

இந்த கோவில்கள் மட்டுமல்லாமல் பல்லவர் காலத்துக் குடைவரை கோவில்களும் இந்த மலைக்கோட்டையில் அமைந்துள்ளன. ஆகையால் இந்த மலைக்கோட்டை ஆன்மிகமும், வரலாறும், புவியியல் ஆச்சரியமும் நிறைந்த ஐகானிக் இடமாக விளங்குகின்றது.

447 படிகள் ஏறி மலையில் உச்சிக்குச் சென்றால் திருச்சியில் ஒட்டுமொத்த அழகையும் பருந்து பார்வையில் கண்டு ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல், ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம், காவிரி ஆறு, கொள்ளிடம் என அனைத்தையும் இங்கிருந்தும் பார்க்க முடியும்.

முக்கொம்பு அணை: திருச்சி என்றதும் நினைவிற்கு வருவது காவிரி தான். கரைபுரண்டு ஓடி வரும் காவேரியை கட்டுப்படுத்தி கிளையாகப் பிரிப்பது தான் இந்த முக்கொம்பு அணை. இந்த முக்கொம்பு பகுதியில் தான் காவேரி மூன்றாவது பிரிந்து டெல்டா மாவட்டங்களுக்கு விவசாய வளம் செழிக்க உதவுகிறது.

இதையும் படிங்க: கணவன் – மனைவி ஒன்னா முன்னேறுவதே அழகானது தான்… வாப்பிள்ஸ் விற்பனையில் அசத்தும் கப்பிள்ஸ்…

விவசாயப் பயன்பாடு மட்டுமின்றி முக்கொம்பு அணை திருச்சி மக்களின் பொழுதுபோக்கிற்குச் சிறந்த இடமாகவும் விளங்குகின்றது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் திருச்சி மக்கள் இங்கு குடும்பத்துடன் வந்து காவிரி ஆற்றில் குளித்து மகிழ்கின்றனர்.

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் என்றதும் ரங்கநாதர் கோவில் தான் அனைவர் மனதிலும் எழும். அந்த கோவில் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதுபோலத் தான் ஸ்ரீரங்கமும். ஆற்றுக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் தமிழ்நாட்டில் ஆற்றுக்குள் உள்ள மிகப்பெரிய தீவாகும்.

மேலும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆகையால் ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் அரங்கநாதரை தரிசிக்கத் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். மேலும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் இங்கு நடைபெறும் பரமபத வாசல் திறக்கும் நிகழ்வு உலகப் புகழ்பெற்றதாகும். இதனால் திருச்சி வரும் மக்கள் கட்டாயம் பார்க்கும் இடத்தில் முக்கியமானதாக ஸ்ரீரங்கம் உள்ளது.

இதையும் படிங்க: பாலே இல்லாமல் பல வெரைட்டியில் டீ… ஆச்சரியப்பட வைக்கும் அரேபியன் டீ வகைகள்…

கல்லணை: 2000 ஆண்டுகளாகக் கம்பீரமாக நிற்கும் கல்லணை தமிழரின் கட்டுமானத் திறனை உலகிற்கு எடுத்துச் சொல்லும் சான்றாக விளங்குகின்றது. காவேரியின் சீற்றத்தைக் குறைத்து, அதனால் ஏற்படும் இழப்பைத் தடுக்கும் வகையில் இரண்டாம் கரிகாலச் சோழனால் அமைக்கப்பட்டது தான் இந்த கல்லணை.

திருச்சி மக்களின் ஃபேவரைட் வீக்கெண்ட் ஸ்பாட் ஆக விளங்கும் கல்லணையில், அணை மட்டுமின்றி கல்லணையைக் கட்டிய கரிகால சோழனின் மணிமண்டபமும் உள்ளது. இதில் கல்லணை குறித்து, கரிகாலச் சோழன் குறித்தும் பல வரலாற்றுத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

சமயபுரம் மாரியம்மன் கோவில்: தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களுக்கெல்லாம் திருச்சியில் உள்ள இந்த சமயபுரம் மாரியம்மன் கோவில் தான் முதன்மையாக விளங்குகிறது. பொதுவாக சாமியிடம் வேண்டி மக்கள் விரதம் இருப்பதைக் கேட்டிருப்போம், ஆனால் இங்கு மக்களுக்காக அம்மனே விரதம் இருப்பது சிறப்பானதாகும்.

இதையும் படிங்க: மலை மாவட்டத்தை மிரள வைக்கும் மழை… கார்மேகத்தைக் கட்டுப்படுத்த சூஞ்சி ஹப்பா வழிபாடு…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்த பிறகு தான் தமிழகத்தின் மற்ற அம்மன் கோவிலில் திருவிழாக்கள் நடக்கும். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தமிழ் செய்திகள்/பயணம்/

Trichy Top 5 Spots | திருச்சியில் பார்க்க இவ்வளவு விஷயம் இருக்கா… இந்த டாப் 5 ஸ்பாட் மிஸ் பண்ணாதீங்க…


நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *