திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையிலும் மற்றும் சாலை விரிவாக்கப் பணிக்காகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டனர்.திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையிலும் மற்றும் சாலை விரிவாக்கப் பணிக்காகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டனர்.

இதில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு , கோவை, ஓசூர், பெங்களூர் ஆகிய மாவட்டங்களை சிதம்பரம் அரியலூர் ஜெயங்கொண்டம் இணைக்கும் பிரதான சாலையாக திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் உள்ளது.

இந்த நம்பர் ஒன் டோல்கேட்டில் இருந்து தான் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரிவு சாலையாக உள்ளது.
24 மணி நேரமும் போக்குவரத்து தகுதியாக காணப்படும் இப்பகுதியில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.

திருச்சி – சேலம் இரு வழிச்சாலை உள்ளது. இந்த சாலையில், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் திருச்சி சேலம் நெடுஞ்சாலை ஆனது பல்வேறு காரணங்களால் பாதுகாப்பற்ற சாலையாகவே இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக இருவழி சாலையில் இருபக்கமும் வணிக நிறுவனங்கள், தரக்கடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டத்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக அளவில் வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைதுறை சார்பில் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நோட்டீஸ் வழங்கியதற்கு செவிசாய்க்காத வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மெத்தனமாக இருந்து வந்தன.

இந்நிலையில் நேற்று காலை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று சாலையோரத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றப்பட்டன.

இந்நிலையில் திருச்சி நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள நடை பாதையை ஆக்கிரமித்து நான்கு பூக்கடைகள் மற்றும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன இதனை ஏன் ? அகற்றப்படவில்லை என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாற்றி கடைகள் முழுவதுமாக அகற்ற வேண்டும், நடைபாதையை அதிகாலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்வார்களுக்கு ஏதுவாக அமைத்து தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை வைத்துள்ளனர்.

அந்த ஆக்கிரமிப்பில் பூக்கடை நடத்தி வரும் ஒரு பெண்ணுக்கும் செந்தில்குமார் என்ற காவலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் இதனால் அவரது ஆதரவில் சுதந்திரமாக அப்பகுதியில் கடையை வைத்து நடத்தி வருகிறார் எனவும் கூறப்படுகிறது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணியாற்றின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது லால்குடி காவல் நிலையத்தில் பணியாற்று வரும் அவர் அப்பகுதியில் கடை நடத்துவதற்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகரத்தினம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *