திருநெல்வேலி மாவட்டம், வேப்பிலங்குளம் கிராம பஞ்சாயத்து செயலாளர் சங்கர் கொலையில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்யக் கோரி இன்று ஒரு நாள் சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம், ரெட்டிபாளையம், காவனூர், பெரியநாகலூர், சுத்தமல்லி, ஆண்டிபட்டாகாடு, உள்ளிட்ட 165 ஊராட்சிகளில், ஊராட்சி செயலாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர். மேலும் செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கருப்புபேட்ஜ் அணிந்து ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

