கோவை, ரத்தினபுரி வேதாம்பாள் நகர் அருகே உள்ள காலி இடத்தில் அப்பகுதி பொதுமக்கள் தினசரி குப்பை கொட்டி வருவது வழக்கம். இந்த நிலையில் அந்தப் பகுதியில் அதிகளவில் குப்பை இருந்து வந்ததால் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனை அடுத்து ஆத்திரமடைந்த மர்ம நபர் ஒருவர் காலி இடத்தில் குப்பை கொட்டு இருக்கும் பகுதியில் தீயை வைத்ததாக கூறப்படுகிறது.
திடீரென மல மலவென என குப்பை முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
அக்கம், பக்கத்தினர் உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.
தீ வைத்தது யார் ? என்பது குறித்து ரத்தினபுரி போலீசார் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப் பகுதியில் குப்பை கொட்டுவதால் மர்ம நபர் யாரேனும் தீ வைத்து இருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

