புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்கு பதிவு செய்த
மாநில CBCID காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது இவ்வழக்கை மத்திய குற்ற புலனாய்வு துறை(CBI) விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பேரூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் செவ்வாய் கிழமை வெண்ணந்தூர் காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.
வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் க.நடராஜன் (எ) நாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
சேலம்-நாமக்கல் மண்டல துணை செயலாளர் வ.அரசன்,
வணிகர் அணி மாநில துணை செயலாளர் பெ.செங்குட்டுவன்,
ஒன்றிய பொருளாலர் பழ.செங்கோட்டுவேல்,
மாவட்ட துணை அமைப்பாளர் இ.சி.எ.பாசறை சு.கார்த்திக்,
ஒன்றிய துணை செயலாளர் பெ.செந்தில்,ராம்ராஜ்,அரவிந்தன்,ஆனந்த்,துரைசாமி,கந்தசாமி, மகளிர் விடுதலை இயக்கம் கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

