கோவை, பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற இருக்கும் திருக்குட நன்னீராட்டை முன்னிட்டு முளைப்பாரி திருவீதி உலா மற்றும் புதிய கோபுர கலசத்திற்கு பூஜைகள் நடைபெற்றது
கோவை பேரூர் அருள்மிகு பச்சை நாயகி, பட்டீஸ்வரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வருகின்ற 10 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு முளைப்பாரி திருவீதி உலா பேரூராதீனம் குரு மகா சன்னிதானம் திருப்பெருந்திரு சாந்தலிங்கம் மருதாசில் அடிகளார் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.…
