மதுரை தனக்கன் குளம் ஊராட்சி திருவள்ளுவர்நகர் பர்மா இலங்கை தமிழர் சங்கத்திற்கும் ஊர் மக்களுக்கும் பாத்தியப்பட்ட அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்வருகிற 10-ம் தேதி(திங்கட் கிழமை)காலை 9.15 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
இந்த கும்பாபிஷேகம் நிகழ்ச்சி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் மதுரை ஆதீனம் தலைமையில் நடக்கிறது.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகளான தலைவர் பி. அன்பழகன் செயலாளர் பி.கதிரவன் பொருளாளர் எம்.பாக்கிய நாதன் துணை தலைவர்கள் சின்னக் காளை ஏ. ஜெகன் மகேந்திரன் டி.பஞ்சாச்சரம் துணைச் செயலாளர்கள் கே. கார்த்திக் ஏ.பூபதி துணை பொருளாளர் பி. அருண் மற்றும் ஒ.பிஎஸ் அணியின் அண்ணா தொழிற் சங்க மதுரை தெற்கு புறநகர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் என்ற சிங்க மாதவன் ஆகியோர் செய்துள்ளனர்.
கும்பாபிஷேக நாளில் விக்னேஸ்வர பூஜை மகா கணபதி ஹோமம் மகா கும்பாபிஷேகம் தீபாரதனை பிரசாதம் வழங்குதல் ஆகியவை இடம் பெறுகின்றன.
அன்பழகன்-மலர் குடும்பத்தார் கும்பாபிசேக நாளில் அன்னதானம் வழங்குகின்றனர்.

