கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் குண்டு, குழியாக சாலை இருப்பதால் தினசரி விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டி, உடனடியாக ஒரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை – கேரளாவிற்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலையான குனியமுத்தூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே சாலை பழுதடைந்து மிக மோசமாகவும் குண்டு, குழியாகவும் இருப்பதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் சிரமம் அடைந்து உள்ளனர்.
அதே போல் சாலையில் புழுதி காற்று வீசுவதால் மூச்சு பிரச்சனை, ஆஸ்துமா நோய்கள் ஏற்படும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் புகார் அளித்தும் தற்பொழுது வரை எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் சாலை அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வேகமாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது என்றும் இதனால் பள்ளி குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்ட வருவதாக இந்த சாலை கடந்து செல்ல மிகவும் அச்சம் அடைந்து உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
எனவே உடனடியாக இந்த சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
