Last Updated:

பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் B.sc Nursing முடித்த 23-45 வயது செவிலியர்கள் தேவை. www.omcmanpower.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். 03/11/2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News18
News18

பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய விருப்பம் உள்ள செவிலியர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

பூட்டான் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.sc Nursing – யில் தேர்ச்சி பெற்று 23 முதல் 45 வயதிற்குட்பட்ட ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

மேற்படி, 2 முதல் 5 வருட பணி அனுபவமுள்ள பணியாளர்களுக்கு ரூ.65,000/- ஊதியமாகவும், 6 முதல் 10 வருட பணி அனுபவமுள்ளவர்களுக்கு 73,000/- ஊதியமாகவும், 10 வருடத்திற்கு மேல் பணி அனுபவமுள்ளவர்களுக்கு ரூ.86,000/-  ஊதியமாகவும் வழங்கப்படும்.

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in – ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை www.omcmanpower.tn.gov.in மூலமாகவும் 6379179200 மற்றும் 044-22502267 ஆகிய அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://forms.gle/JS2b341tf2tcpJn56 என்ற link-ல்  தங்கள் சுய விவரங்களை பூர்த்தி செய்தும் கல்விச்சான்றிதழ் பாஸ்போட் (Passport) அனுபவச்சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com  என்ற  இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு 03/11/2025-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *