திருப்பரங்குன்றத்தில் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி- கோலப் போட்டியில் பெண் ஆரோக்கிய விழிப்புணர்வுமதுரை திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மதுரை மாவட்டம் சார்பில் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று(6.2.2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் தமிழரசி துணை இயக்குனர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இதில்; திருமங்கலம் திருப்பரங்குன்றம் உசிலம்பட்டி பேரையூர் கல்லுப்பட்டி செல்லம்பட்டி சேடப்பட்டி உள்ளிட்ட யூனியன் கிராமங்களில் இருந்து மகளிர் சுய உதவி குழுவினர் அதிகளவில் பங்கேற்றனர்.இந் நிகழ்ச்சியில் கயிறு இழுத்தல் போட்டி ஓவியப் போட்டி சிலம்ப போட்டி கோலப் போட்டி ஆகியவை இடம்பெற்றன. கோலம் வரைதலில் பெண்கள் பாதுகாப்பு பெண்கள் சுகாதாரம் குறித்து அறிவுறுத்தப்பட்டிருந்தன.இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட அளவில் வென்ற நபர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் ஆரோக்கியம் மற்றும்
சுகாதாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி-
கோலப் போட்டியில் பெண் ஆரோக்கிய விழிப்புணர்வு 