Last Updated:
விண்ணப்ப செயல்முறை செப்டம்பர் 10, 2025 முதல் அக்டோபர் 9, 2025 வரை தொடரும். விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
தடகள வீரர்களுக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வரும் ரயில்வேயில் லட்சக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை பெறுகின்றனர். இந்த மக்களின் வாழ்வோடு இணைந்ததாக இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7வது ஊதியக் குழுவின்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். நிலை-1 பதவிகளுக்கான தொடக்க சம்பளம் ரூ. 18,000. நிலை-2/3 பதவிகளுக்கு ரூ.19,900 முதல் ரூ.20,000 வரை. நிலை-4/5 பதவிகளுக்கு ரூ.24,000 முதல் ரூ.28,000 வரை. இவை தவிர, அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி (HRA), போக்குவரத்துப்படி (TA), ஓய்வூதியம், இலவச ரயில் பாஸ்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளன.
தேர்வு மூன்று நிலைகளில் நடைபெறும்: 1. விளையாட்டு சோதனைகள் – திறன் மற்றும் உடற்தகுதி சோதனை. 2. விளையாட்டு செயல்திறன் மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் புள்ளிகளைக் கணக்கிடுதல். 3. ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை.
September 08, 2025 8:03 PM IST

