கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் பதவிக்கும் (Office Assistants – Multipurpose), நிலை 1  உதவி மேலாளர் அதிகாரி (Officer Scale-I Assistant Manager ) பதவிக்கும்  ஏதேனும் துறைகளில் இளநிலை (Bachelor Degree) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Officer Scale-II General Banking Officer (Manager)  பதிவிக்கு கால்நடை பராமரிப்பு, வேளாண், வேளாண் பொறியியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Officer Scale-II Specialist Officers (Manager) பதிவிக்கு Electronics / Communication / Computer Science /

Information Technology ஆகிய துறைகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்:  13,217 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயதுக்கான தகுதி: நிலை- I (உதவி மேலாளர்) பதவிக்கு, விண்ணப்பிக்க கூடியோர் 18 வயதுக்கு மேல் மற்றும் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். நிலை- II அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 21 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். நிலை II Specialist Officers பதவிக்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் குறைந்தபட்சம் 21 வயது மற்றும் 40 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

இடஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சில தளர்வுகள் உள்ளன. கல்வி தகுதியானது சம்பந்தப்பட்ட துறையில் UGC அங்கீகாரம் கொண்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிராந்திய மொழிகளில் தேர்வு: உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் சம வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 ஆகிய பணிகளுக்கான தேர்வை கொங்கனி மற்றும் கன்னடம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று 2019-ம் ஆண்டு அரசு முடிவெடுத்தது. அப்போதிலிருந்து பிராந்திய மொழிகளிலும் மேற்கண்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

தெரிவு முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

எப்படி விண்ணப்பிப்பது: முதலில் ibps.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.

“Click here to apply online for CRP RRBs XIV” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.

பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும். ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பதிவிறக்கம் செய்யம் இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *