இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு விவரங்களைப் பயன்படுத்தி, அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
முதல்நிலைத் தேர்வுக்கு சுமார் ஏழு நாட்களுக்கு முன்பு அட்மிட் கார்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு தேதி அக்டோபர் 3, 2025. அதிகாரப்பூர்வ இணையதளங்கள்: licindia.in மற்றும் ibpsonline.ibps.in
IBPS இணையதளத்திற்கு (ibpsonline.ibps.in) அல்லது எல்.ஐ.சி. (licindia.in) பணியிடங்கள் பகுதிக்குச் செல்லவும்.
பதிவிறக்க இணைப்பைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பதிவு எண் (Registration Number), கடவுச்சொல் (Password) மற்றும் திரையில் உள்ள பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும்.
உங்கள் அட்மிட் கார்டு திரையில் தோன்றும்.
அதை பதிவிறக்கம் செய்து, தெளிவான அச்சுப் பிரதி (printout) எடுத்துக்கொள்ளவும்
அட்மிட் கார்டில் கீழ்வரும் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
விண்ணப்பதாரரின் முழுப் பெயர்
புகைப்படம்
பதிவு எண் / ரோல் எண்
தேர்வு மையம் மற்றும் இடம்
தேர்வு நாள், நேரம்
பிறந்த தேதி மற்றும் பாலினம்
விண்ணப்பதாரரின் கையொப்பம்
அட்மிட் கார்டு: பதிவிறக்கம் செய்யப்பட்ட அட்மிட் கார்டின் அச்சுப் பிரதி.
அடையாள அட்டை: அசல் புகைப்படத்துடன் கூடிய அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை (உதாரணம்: ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம்).
புகைப்படம்: விண்ணப்பத்தில் பயன்படுத்திய அதே சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள் – சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி
முதல்நிலைத் தேர்வு (Prelims): இது ஒரு புறநிலை வகை தேர்வு (objective type test).
முதன்மைத் தேர்வு (Mains): இதில் புறநிலை மற்றும் விளக்கமளிக்கும் (descriptive) தேர்வுகள் இருக்கும்.
நேர்காணல் (Interview): முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
September 11, 2025 5:56 PM IST
