Last Updated:
அதேபோல கடல் கடல் சார்ந்து தெரிந்து கொள்ளும் அதைப்பற்றி கேள்விகள் வந்தால் அதை எதிர்கொள்வதற்கும்வறீதையா கான்ஸ்தந்தின் எழுத்துக்களை புத்தகங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும் கடல் சார்ந்த ஆராய்ச்சியில் அவரின் பங்கு மிக முக்கியமானது
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டுக்கான கிராம நிர்வாக அலுவலர்கள், தட்டச்சர்கள் உள்ளிட்ட குரூப் 4 பணியாளர்கள் 4662 பேரை நியமிப்பதற்கான தேர்வு கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்றது.
இத்தேர்வுக்கு மட்டும் சுமார் 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதாவது. ஒரு பதவிக்கு சுமார் 287 பேர் போட்டி போடுகின்றனர்.
2013-ஆம் ஆண்டுக்கு பிந்தைய பத்தாண்டுகளில் இதுவரை 7 முறை குரூப் 4 தேர்வுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியிருக்கிறது. அவற்றில் 2023ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு தவிர மீதமுள்ள 5 தேர்வுகளில் 3 தேர்வுகளின் முடிவுகள் 5 மாதங்களுக்குள்ளாகவும், 3 தேர்வுகளின் முடிவுகள் 3 மாதங்களுக்குள்ளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. 2023ம் ஆண்டு 7,301 பேரை தேர்வு செய்வதற்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக ஓராண்டுக்கு மேலானது. இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து,கடந்தாண்டு (2024) 8932 பேரை தேர்வு செய்வதற்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதங்களுக்குள்ளாகவே வெளியானது.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர், பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வுகளை நடத்தி வருவதாகவும், 3 மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். தேர்வு முடிவுற்று 3 மாதங்கள் கடந்த நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு தீபவளாக பரிசாக அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னதாக கூட வெளியாகுமா என தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
அடுத்தது என்ன? குரூப் 4 தேர்வு என்பது ஒற்றை நிலை தேர்வாகும். தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படும்.
வெற்றி வாய்ப்பு விகிதம் (Selection Rate) என்பது சற்றேர்குறைய ≈0.35% ஆகும். அதாவது, 1,000 பேரில் குறைந்தது 3.5 பேர் மட்டும் தான் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாடு அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 4662 பேரை மட்டும் தேர்வு செய்ய குரூப் 4 தேர்வு அறிவிப்பை வெளியிடுவதாக என தேர்வர்களும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
October 22, 2025 3:48 PM IST

