Last Updated:
புதுச்சேரியில் 2000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை சார்பில் தனியார் துறை பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக 40 முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமின் சிறப்பு அம்சமாக பெண்களுக்கு மட்டும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டவர்கள் நேர்முகத் தேர்வு எழுத்து தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகள் நடைபெற்றது.மேலும் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஆணை சான்றிதழ் உடனே வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிலாளர் துறை சார்ந்த அதிகாரிகள் செய்திருந்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry)
March 30, 2025 11:37 AM IST
