Last Updated:

RRB Job| இந்திய ரயில்வேயில் 9900 உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்பு..எப்படி? எங்கே? வீண்ணபிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

X

இந்திய

இந்திய ரயில்வேயில் உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்பு  2025

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் (RRBs) உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த பதவிக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் தொடங்கும் தேதி 10 ஏப்ரல் 2025 என்றும், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 9 மே 2025 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம், வயது வரம்பு மற்றும் காலிப்பணியிடங்கள்: இந்த பதவிக்கு 7வது சம்பளக் குழுவின்படி, மாத சம்பளம் ரூ.19,900/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவத் தரநிலை A-1 ஆகும், அதாவது அதிகபட்ச உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 01 ஜூலை 2025 தேதியின்படி 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். இந்த ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 9900 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது முதன்மை விவரங்களை சரிபார்க்க ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்கள், 10ஆம் வகுப்பு மார்க் ஷீட்டில் உள்ள விவரங்களுடன் 100% பொருந்த வேண்டும். ஆதார் விவரங்களில் மாற்றம் தேவைப்பட்டால், அதை விண்ணப்பிக்கும் முன்பு திருத்திக் கொள்ள வேண்டும். மேலும், ஆதார் அடையாளம் (கைரேகை மற்றும் கண் கருவிழிகள்) பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்,(https://www.rrbchennai.gov.in/) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப செயல்முறை தொடங்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: Pamban Railway Bridge: “ராமநவமியில் பாம்பன் புதிய ரயில் பாலம்” – திறப்பு தேதி பற்றி தெற்கு ரயில்வே அப்டேட்…

விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து ஆவணங்களும் சரியானதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக, ஆதார் விவரங்கள், கல்விச்சான்றிதழ்கள் மற்றும் புகைப்பட அடையாளங்களை சரியாக பதிவுசெய்வது முக்கியம். ஆதாரத்தில் உள்ள புகைப்படம் அண்மையில் எடுக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *