Last Updated:
நேர்முக தேர்வின் போது சில சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவை பொது அறிவு தகவலாக இல்லாவிட்டாலும் தேர்ச்சி எழுதும் நபரின் திறமையை சோதிக்கும் வகையில் அமையும்
போட்டித் தேர்வுகள் மட்டும் இன்றி நமது அன்றாட வாழ்விலும் பொது அறிவு தகவல்கள் அதிகம் பயன்படுகின்றன. பொது அறிவு தகவல்களை நாம் எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறோமோ அது நமக்கு வாழ்வில் ஏதாவது ஒரு சூழலில் உதவப்படும்.
அதனால் மிக முக்கியமான பொறுப்புகளுக்கு தேர்வுகள் வைக்கப்படும்போது அதில் பொது அறிவு கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன. ஏனென்றால் தேர்வில் தேர்ச்சி பெரும் நபர்கள் பொதுவான தகவல்களை அறிந்திருந்தால் மட்டுமே அவர்களால் பல்வேறு சவால்களை தங்களது பணிக்காலத்தில் எதிர்கொள்ள முடியும். இதேபோன்று சூழ்நிலைக்கு தக்கவாறு முடிவு எடுக்கக் கூடிய திறமையும் அதிகாரிகளுக்கு தேவைப்படுகிறது.
இதற்காக நேர்முக தேர்வின் போது சில சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவை பொது அறிவு தகவலாக இல்லாவிட்டாலும் தேர்ச்சி எழுதும் நபரின் திறமையை சோதிக்கும் வகையில் அமையும். அந்த வகையில் போட்டி தேர்வை எதிர்கொள்ளும் நபர்கள் அனைத்து விதமான கேள்விகளுக்கும் நுணுக்கமாக ஆராய்ந்து பதில் அளிக்கக்கூடிய திறமை கொண்டவராக இருக்க வேண்டும்.
ஒரு முக்கிய பொறுப்புக்காக நேர்காணலில் பங்கேற்ற ஒருவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது காலையில் நான்கு கால்களுடனும் மாலையில் இரண்டு கால்களுடன் இரவில் மூன்று கால்களுடன் நடக்கும் உயிரினம் என்று கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு மேலோட்டமாக பார்த்தால் எந்த ஒரு பதிலும் சரியானதாக அமையாது. அதாவது இந்த கேள்விக்கு நேரடியான பதில் ஏதும் கிடையாது.
ஆனால் இந்த கேள்வியில் எழுப்பப்பட்ட அம்சங்கள் மறைமுகமாக சில விஷயங்களை குறிக்கின்றன. உண்மையிலேயே அப்படி ஒரு உயிரினம் கிடையவே கிடையாது. சமயோஜிதமாக நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு விடை மனிதனாகத்தான் இருக்க முடியும்.
அதாவது இங்கு கேள்வியில் குறிப்பிடப்பட்ட காலை என்பது மனிதனின் குழந்தை பருவத்தை குறிக்கிறது. அதாவது குழந்தை பருவத்தில் மனிதன் 4 கால்களால் அதாவது 2 கைகள் மற்றும் 2 தவழ்வார்கள். மாலையில் 2 கால்கள் என்பது மனிதன் இளம் பருவத்தை முதுமைக்கு முந்தைய பருவத்தை குறிக்கிறது.
இரவில் மூன்று கால்களால் நடக்கும் என்பதற்கு முதுமை காலத்தில் மனிதன் 2 கால்கள் மற்றும் கம்பு ஊன்றி ஊன்றி நடப்பதை குறிப்பதாகும். அந்த வகையில் சூழ்நிலைக்கு ஏற்றபடி சமயோஜிதமாக இந்த கேள்விக்கு விடை அளிக்க வேண்டும் என்றால் அது மனிதன் என்பதுதான் சரியான விடையாக இருக்கும்.

