Last Updated:
Mat Making Business| பெண்களுக்கு கை கொடுக்கும் சுய தொழில்கள். வீட்டில் இருந்தபடியே மேட் தயாரித்து வருமானம் ஈட்டும் பெண்கள் பற்றிய விரிவான செய்தி தொகுப்பு இங்கு காணலாம்.
மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெண்கள் பல்வேறு சுய தொழில்கள் செய்து முன்னேற்றம் கண்டு வருகின்றனர். வீட்டில் இருந்தபடியே கைவினைப் பொருட்கள் முதல் பல்வேறு பொருட்களை தயார் செய்து அதனை விற்பனை செய்தும் வருகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து வருகிறது.
அதே போல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் உள்ள பெண்களும் கூடை பின்னுதல், இயற்கை முறையில் குளியல் சோப், ஊறுகாய், கைவினைப் பொருட்கள் போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரேமா என்ற பெண் மற்றும் சில பெண்கள் ஒரு குழுவாக இணைந்து கால் மிதியடி தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய பெண்மணி, ”மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பயிற்சி பெற்று அத்துடன் கடன் உதவியும் பெற்று கால் மிதியடி தயாரிக்கும் இயந்திரம் வாங்கி இதனை தயார் செய்து விற்பனை செய்தும் வருகிறோம். இந்த பெடல் போடும் இயந்திரத்தில் வேஸ்ட் துணிகளை பயன்படுத்தி இன்ச் கணக்கில் மேட் தயார் செய்து வருகிறோம். இது மட்டுமல்லாமல் பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள பெண்களுக்கும் இந்த கால் மிதியடி தயாரிப்பதற்கு கற்றுக் கொடுத்தும் வருகிறோம். மெட்டீரியல்களை மதுரை, திருச்சி, பெங்களூர் போன்ற ஊர்களில் இருந்து வாங்குகின்றோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், குறைந்தபட்சம் 35 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை நாட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். இதன் மூலம் எங்களது வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இதில் வரும் தொகை அன்றாட செலவுகளுக்கும், சிறிய சேமிப்புக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு மாட்டிற்கு லாபம் பத்து ரூபாய் முதல் கிடைக்கும். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றோம். அத்துடன் பல்வேறு கிராமங்களுக்கு சென்று மற்ற பெண்களுக்கு இதனை கற்றுக் கொடுத்தும் வருகிறோம். அதற்கும் எங்களுக்கு ஊதியமும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் எங்களது வாழ்க்கை தரம் மேம்பட்டு வருகிறது,” என்றும் தெரிவிக்கின்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
February 17, 2025 11:02 AM IST
Mat Making Business: “பெங்களூர் புராடக்ட் தான் – குவாலிட்டி பக்காவா இருக்கும்” – வீட்டில் இருந்தபடியே மேட் தயாரித்து இலாபம் ஈட்டும் பெண்…
