Last Updated:
India Post Office Recruitment| இந்திய அஞ்சல் துறையில் அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் 21000க்கும் மேற்பட்ட அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் பணியிடங்கள் உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2000 க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளது. இவை விரைவில் அஞ்சல் துறையால் நிரப்பப்பட உள்ளது. இதன் சிறப்பம்சமே இதற்கு தேர்வு கிடையாது. தேர்வு நேர்முக தேர்வு எதுவும் இல்லாமல் நேரடியாக தேர்வர்கள் பத்தாம் வகுப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 40 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருவருமே இதற்கு விண்ணப்பிக்கலாம். வகுப்பு வாரியாக இதற்கு வயது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் என்ற வலைத்தளத்தில் சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி 03.03.2025. விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
February 16, 2025 9:54 PM IST
