புதிய பாம்பன் பாலத்தின் நடுவில் உள்ள செங்குத்து பாலத்தினை உயர்த்தி சோதனை

புதிய பாம்பன் பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று ரயில் போக்குவரத்திற்கு தயாராக உள்ளது. ரயில் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என்ற நிலையில் பாலத்தின் நடுவில் கப்பல்கள் செல்லும் வகையில் உள்ள செங்குத்து பாலத்தை வெள்ளிக்கிழமை அன்று உயர்த்தி சோதனை நடத்தப்பட்டது. முதலில் புதிய பாம்பன் பாலத்தின் செங்குத்து பாலம் உயர்த்தப்பட்டது. அதன் வழியாக கடற்படை கப்பல்கள் சென்றன. பின்பு செங்குத்து பாலம் இறக்கப்பட்டு சென்னை – ராமேஸ்வரம் ரயிலின் காலிப்பெட்டி தொடர் புதிய பாலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டது. மண்டபத்தில் இருந்து புதிய பாலத்தை கடந்த ரயில் மீண்டும் மண்டபம் ரயில் நிலையத்திற்கு திரும்பி சென்றது. ரயில் பெட்டி தொடர் வெள்ளோட்டம் முடிந்தவுடன் மீண்டும் செங்குத்துப் பாலம் உயர்த்தப்பட்டு கடற் படைக் கப்பல்கள் திரும்பவும் கடலில் ரயில் பாதையின் கீழ்ப்பகுதி வழியாக கடந்து சென்றன. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இதற்காக பழைய பாலத்தின் கிர்டர்களும் உயர்த்தப்பட்டிருந்தன. இந்த சோதனை முதுநிலை கோட்ட சைகை மற்றும் தொலை தொடர்பு மேலாளர் ஆர்.ராம்பிரசாத், முதுநிலைக்கோட்ட மின் பொறியாளர் வி.மஞ்சுநாத் யாதவ் , கோட்ட பொறியாளர் சந்தீப் பாஸ்கர், உதவி பாதுகாப்பு படை ஆணையர் சிவதாஸ் மற்றும் உதவிக்கோட்ட பொறியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *