தமிழக அரசின் முதிர் தமிழறிஞர் விருது பெற்ற மூத்த தமிழறிஞர் கு. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமெரிக்காவில் உள்ள சிகாகோ பகுதி பேராசிரியர் தாமஸ் தமிழில் அழகாக உரையாற்றினார். அவர் தனது உரையில் கடந்த 5ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து தமிழை கற்று அதன் தொன்மையை அறிந்துள்ளேன். அதன் இனிமையை அதன் சிறப்பை உலக நாடுகளில் கொண்டு செல்வதுடன் தமிழ் மொழி வளமை குறித்து கிராமப் புற மாணவர்களிடம் விளக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நூற்றுக் கணக்கான பள்ளி சிறுவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருக்குறள் விளக்க உரை கேட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நோட்டு புத்தகங்கள் திருக்குறள் புத்தகம் பரிசாக அளிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு தரப்பட்டது. நிகழ்ச்சியில் வலையங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துப் பிள்ளை பெருமாள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அழகு மதுரை மாநகர் விசிக மாவட்ட செயலாளர் காளிமுத்து மண்டல செயலாளர் மாலிக் 4-வது வார்டு உறுப்பினர் மந்தைசாமி காங்கிரஸ் பிரமுகர் வலையங்குளம் ஊராட்சி மன்ற தலைவர்அழகு ராஜ் வவலையங்குளம் ஊராட்சி மன்ற தலைவர்அழகு ராஜ் வவலையங்குளம் ஊராட்சி மன்ற தலைவர்அழகு ராஜ் , ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
