Last Updated:
சென்னை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னைப் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த பயிற்றுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவரங்கள், விண்ணப்பிக்க கடைசி தேதி, விண்ணப்பிக்க வேண்டிய முகவரி,சம்பள விவரம் பற்றி விரிவாக பார்க்கலாம்.
சென்னைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவ /மாணவிகள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வசதியாக சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அந்தந்த கல்லூரிகளின் வளாகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த போட்டித்தேர்வுகளுக்கான (TNPSC, TNSURB, SSC,RRB,etc..) வகுப்புகளைக் கையாள திறமையும், அனுபவமும் மிக்க பயிற்றுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கு ரூ 400 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்புடன் 30/09/2025 க்குள் அலுவலக வேலைநாட்களில் சென்னை-32. கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
September 20, 2025 6:04 PM IST

