Last Updated:
IB ACIO ஆட்சேர்ப்பு 2025: உள்துறை அமைச்சகத்தின் கீழ் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ACIO) கிரேடு-II/நிர்வாகி பதவிக்கான 3,717 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
IB ACIO ஆட்சேர்ப்பு 2025: உள்துறை அமைச்சகத்தின் கீழ் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ACIO) கிரேடு-II/நிர்வாகி பதவிக்கான 3,717 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் கட்டாயம். அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: ஆகஸ்ட் 10, 2025 நிலவரப்படி குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 27 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: IB ACIO 2025 குறுகிய அறிவிப்பில் மொத்தம் 3,717 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பதற்கான நாள்: ஜூலை 19ஆம் தேதி முதல் www.mha.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விபரம்: ரூ.44,900 முதல் ரூ. 1,42,400 வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முறை: முதல் நிலை தேர்வாக 100 மதிப்பெண்ணிற்கு ஒரு மணி நேர ஆப்ஜெக்டிவ் தேர்வும், இரண்டாம் நிலை தேர்வாக 50 மதிப்பெண்ணிற்கு ஒரு மணி நேர டிஸ்கிரிப்ட் தேர்வும், மூன்றாம் நிலை தேர்வாக 100 மதிப்பெண்ணிற்கு நேர்முகத் தேர்வும் நடைபெறும்.
July 15, 2025 10:51 AM IST