Last Updated:

சென்னையில் தங்கும் வசதியுடன் ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு இன்கம் டேக்ஸ் பயிற்சி வழங்கப்படுகிறது என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தாட்காம் மூலம் வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள்- உடனே அப்ளை பண்ணுங்கதாட்காம் மூலம் வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள்- உடனே அப்ளை பண்ணுங்க
தாட்காம் மூலம் வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள்- உடனே அப்ளை பண்ணுங்க

சென்னையில் தங்கும் வசதியுடன் ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு ‘இன்கம் டேக்ஸ்’ பயிற்சி வழங்கப்படுகிறது என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

‘இன்கம் டேக்ஸ்’ பயிற்சி:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி தொழில் நுட்ப பயிற்சி (Advanced GST and Income Tax Professional), (Certified Manufacturing Professional with Specialization in Industry 4.0), திறன்களில் ITES மற்றும் BPO பயிற்சி (Certified ITES & BPO Professional with Specialization in Digital Skills), UI/UX (Certified Web Technologies with Specialization in UI/UX), @ (Certified Digital Marketing Professional) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் இனத்தை சார்ந்தவர்களாகவும், 21 முதல் 30 வயது வரை உள்ளவர்களாகவும், 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு வழி வகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை!

இந்த பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கான கால அளவு 55 நாட்கள் ஆகும். சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *