காலிப்பணியிடங்கள்: டிக்கெட் விற்பனையாளர் – 01, வாட்ச்மேன் – 02, கூர்க்கா – 01, எவலார் – 01, வாஷர்மேன் – 01, திருவலகு – 03, துப்புரவாளர் – 05, துணை கோயில் எழுத்தர் – 01, ஓதுவார் – 01 மற்றும் துணை கோவில் மேளம் செட் பதவிக்கு – 01 காலியிடமும் நிரப்பப்படவுள்ளது.
கல்வித் தகுதி: டிக்கெட் விற்பனையாளர் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும். வாட்ச்மேன் பதவிக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கூர்க்கா பதவிக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். எவலர் பதவிக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வாஷர்மேன் பதவிக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். திருவலகு பதவிக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். துப்புரவாளர் பதவிக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். துணை கோயில் எழுத்தர் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும், ஓதுவார் பதவிக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் (2) மத நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேவாரப் பாடசாலையால் வழங்கப்பட்ட தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் படிப்பை முடித்ததற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
துணை கோயில் மேளம் தொகுப்பு – (1) தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் மத நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேவாரப் பாடசாலையால் வழங்கப்பட்ட தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் படிப்பை முடித்ததற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம்: டிக்கெட் விற்பனையாளர் நிலை 22 பதவிக்கு மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600, வாட்ச்மேன் நிலை 17 பதவிக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400, கூர்க்கா நிலை 17 பதவிக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400, எவலார் நிலை 10 பதவிக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500, வாஷர்மேன் நிலை 12 பதவிக்கு மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800, திருவலகு நிலை 17 பதவிக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வழங்கப்படும்.
துப்புரவாளர் நிலை 10 பதவிக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.50,400, துணை கோயில் எழுத்தர் நிலை 16 பதவிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000, ஓதுவார் நிலை 22 பதவிக்கு மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600, துணை கோயில் மேளம் தொகுப்பு நிலை 16 பதவிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 18 வயதில் இருந்து 45 வயது உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்தப் பதவிக்குக் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலமாக ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பதிவுகளுக்கு விண்ணப்பிக்க https://vanabadrakaliamman.hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பப் படிவத்தை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனைத்து இணைப்புகளுடன் 30.06.2025 என்ற தேதிக்குள் வனபத்ரகாளியம்மன் கோவிலில் மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
June 17, 2025 6:40 PM IST
