Last Updated:
காலியிடங்களை நிரப்பும் பொருட்டு 02-04-2025 அன்று காலை 10 மணி அளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ITI-பிரிவில் காலியாக உள்ள தொழிற் பழகுநர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மேலும் மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டது.
காலிப்பணியிடங்கள்: மோட்டார் வாகனம் மெக்கானிக் பதவியின் கீழ் 120 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பதவிக்கு ரூபாய் 14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் மெக்கானிக் பதவியின் கீழ் 60 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பதவிக்கு ரூபாய் 14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
மின்பணியாளர் பதவியின் 3 காலிப்பணியிடங்களும், ரூ14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன மின் பொறியாளர் பதவியின் கீழ் 35 காலிப்பணியிடங்களும் ரூ.14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்டர் பதவியின் கீழ் 19 காலிப்பணியிடங்களும், ரூபாய் 14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். Fitter பதவியின் கீழ் 40 காலிப்பணியிடங்களும், ரூ.14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Turner பதவியின் கீழ் 1 காலிப்பணியிடமும், இதற்கு ரூபாய் 14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓவியர் பதவியின் கீழ் 22 காலிப்பணியிடங்களும், ரூ.14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சிறப்பு முகாம்: மேற்காணும் தொழில் பழகுநர்கள் பயிற்சிக் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு 02-04-2025 அன்று காலை 10 மணி அளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டை, சென்னையில் நடைபெறும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 19, 2025 12:36 AM IST

