Last Updated:
Private Job Fair: தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில கிராமப்புற / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மெகா வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்தனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி போன்ற பல மாவட்டங்களிலிருந்து கிட்டத்தட்ட 134 நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் தங்கள் நிறுவனத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்தனர்.
இது குறித்து வேலைவாய்ப்பு முகாமிற்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் கூறுகையில், “எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி தான். இங்கு இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது பலருக்கும் நன்மையாக இருக்கிறது.
இதையும் படிங்க: Summer Season Fruits: கோடை வெயிலில் உடலுக்குக் குளிர்ச்சி தரும் பழங்கள்… களைகட்டும் வாட்டர் ஆப்பிள் விற்பனை…
பொதுவாக இங்கிருந்து வேலை தேடுவதற்கு வெளியூரே செல்ல வேண்டி இருக்கிறது, இருப்பினும் வேலை கிடைக்குமா என்றும் தெரியாது. ஆனால் இவ்வாறு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது பயனுள்ளதாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
February 22, 2025 4:17 PM IST
