கோவை, ஈச்சனாரி பகுதியில் சுந்தராபுரம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இரண்டு கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த இரண்டு கார்களிலும் அதிக அளவில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் வந்த காரில் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் (38) என்பவர் இருந்தார். இரண்டாவது காரில் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த பழைய பேப்பர் வியாபாரம் செய்யும் முருகன் (32) , என்பவர் இருந்து உள்ளார்.
இருவரிடம் இருந்தும் மொத்தம் 210.350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
இருவரையும் கைது செய்த காவல் துறையினர், இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் 210.350 கிலோ புகையிலை பொருள்களுடன் இரண்டு கார்கள் பறிமுதல் : கடத்திய இருவர் கைது !!! 