Last Updated:
Coimbatore Corporation: குடிநீர் குழாய்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணி காரணமாகக் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் வழங்கும் பில்லூர் 1 மற்றும் II குடிநீர் திட்டத்தில் குடிநீர் சேகரித்துக் கொண்டுவரும் பிரதானக் குழாய்களில் கட்டன் மலை என்ற இடத்தில் பராமரிப்புப் பணிகள் 24.022025 முதல் 25.02.2025 ஆகிய இரண்டு நாட்கள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால் பில்லூர் பில்லூர் I மற்றும் II குடிநீர் திட்டத்தில் குடிநீர் சேகரிப்பு இருக்காது என்பதால், இத்திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகம் பெறும் பகுதிகளான சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி கணபதி மாநகர் காந்திமா நகர், சங்கனூர் ரோடு கணபதி, ஆவாரம்பாளையம் பீளமேடு, சவுரிபாளையம், காந்திபுரம், வ.உ.சி பூங்கா, சித்தாபுதூர், ராமநாதபுரம், டவுன்ஹால், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், விளாங்குறிச்சி மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோக நாட்களின் இடைவெளி அதிகமாகும் என்பதைத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் மற்ற குடிநீர் ஆதாரங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Coimbatore,Tamil Nadu
February 24, 2025 10:05 AM IST

