கோவை மாவட்டத்தில் இருந்து தினசரி பல்வேறு மாவட்டங்களுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்குவது வழக்கம். இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பேருந்தில் பயணித்த பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் சூலூரில் இருந்து காங்கேயம் செல்வதற்கு வழக்கமாக 40″ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த பேருந்தில் 110 ரூபாய் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து ஓட்டுனரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட வீடியோ தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் குளிர்சாதனப் பேருந்துக்கு வசூலிக்கக்கூடிய கட்டணத்தை சாதாரண பேருந்தில் வசூலிப்பதாக பயணி ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார்.
குளிர்சாதனம் பேருந்தில் பயன்படுத்தப்படும் பயணச்சீட்டின் இயந்திரத்தை இந்த பேருந்தில் பயன்படுத்துவதால் கட்டணம் அதிகமாக இருந்ததாக ஓட்டுனர் ஒப்புக்கொண்டது பயணியிடம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இதுபோல அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பயணிகள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர்.

