மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் கோவை பீளமேடு கொடிசியா அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் 8 மாவட்டங்களை சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இது தவிர மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக அரசின் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என் நேரு, மின்சாரத் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தி துறை அமைச்சர் மு.பி. சாமிநாதன், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, ஆதிதிராவிடர் நலத்துறை மதிவேந்தன், சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், உள்ளிட்ட 8 அமைச்சர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
இவர்கள் துறை வாரியாக ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள், இன்னும் முடிவு பெறாமல் நிலுவையில் உள்ள பணிகள், அடுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தனித் தனியாக ஆய்வு நடத்துகின்றனர்.
கூட்டத்தில் 800 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு உள்ளனர்.

