Last Updated:

Nursing jobs| இதற்கு பதிவு செய்ய கீழாகுறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் கொள்ளலாம்.

X

B.sc

B.sc நர்சிங் முடித்தவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய வாய்ப்பு!

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.sc Nursing – யில் தேர்ச்சி பெற்று 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி:கல்வி தகுதி : B.sc Nursing,பணி அனுபவம்; 2 வருடங்கள்,வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in கொள்ளலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் சுய விவர விண்ணப்பப்படிவம், பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் (Passport) நகல், கல்வி சான்றிதழ் கட்டாயம். குறிப்பிட்டுள்ள ஆவணங்களை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு 18/02/2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் வாசிக்க: Fog covers Big Temple: “பனியால் சூழ்ந்து ரம்மியமாக காட்சி கொடுத்த சோழ நகரம்” – தீடிரென மறைந்த தஞ்சை பெரிய கோவில்…

இவர்களுக்கான நேர்காணல் வருகிற 23.02.2025 முதல் 26.02.2025 வரை கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்தப்பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டும் வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்டுகளோ கிடையாது.விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், தொலைபேசி எண்:044-22502267/044-22505886, மற்றும் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *