Last Updated:

இந்தியா அஞ்சல் அலுவலகத்திற்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 21413 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

X

தபால்

தபால் துறை வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevak (ஜிடிஎஸ்), கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்), டக் சேவக் பதவிகளுக்கான மொத்தம் 21,413 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனைகள்,மருத்துவர்கள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

காலி பணியிடங்கள்: Gramin Dak Sevaks (GDS), Branch Postmaster (BPM), and Assistant Branch Postmaster (ABPM) எனமொத்தம் 21,413 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வி தகுதி: இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: இதற்கு 18 வயதில் இருந்து 40 வயதுக்குள் இருப்பவர்கள்விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு தளர்வுகள்: இதில் SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து ஆண்டுகள், OBC பிரிவினர்களுக்கு மூன்று ஆண்டுகள், PWD பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகள்,PwD மற்றும் OBC பிரிவினர்களுக்கு 13 ஆண்டுகள், PwD மற்றும் SC/ST பிரிவினர்களுக்கு 15 ஆண்டுகள் என வயதுவரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.

சம்பளம்: Assistant branch post master பதவிகளுக்கு ரூ. 10,000 முதல் ரூ. 24,470 வரையும்,Branch post master பதவிகளுக்கு ரூ. 12,000 முதல் ரூ. 29,380 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: இதில் விண்ணப்பிப்பதற்கு https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: இதற்கு விண்ணப்ப கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். SC, ST, PWD, பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இதற்கான விண்ணப்பம் பிப்ரவரி 10ஆம் தேதியில் தொடங்குகிறது. 2025 மார்ச் 3 ஆம் தேதிஇதில் விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி ஆகும். மேலும்மார்ச் 6 ஆம் தேதி முதல்8 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் திருத்தம் செய்து கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *