Last Updated:

மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெறும் காட்டன் மேளா பொருட்காட்சி வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

X

பொருள்காட்சி

பொருள்காட்சி

மதுரையில் தமுக்கம், காந்தி மியூசியம் மைதானம் போன்ற பகுதிகளில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி பர்னிச்சர் கண்காட்சி ஆடைகள் கண்காட்சி நாய்கள் கண்காட்சி என பல விதமான கண்காட்சிகள் நடைபெறுவது என்பது வழக்கமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான முதல் கண்காட்சியாக மதுரை காந்தி மியூசியம் மைதானத்தில் காட்டன் மேளா என்ற தலைப்பில் மாபெரும் வெளி மாநில ஆடைகள் கண்காட்சி நடந்து வருகின்றது.

அதாவது 30க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் போடப்பட்டுள்ள இந்த கண்காட்சியில், நுழைவு பகுதியில் ராஜஸ்தான் மரச்சாமான்கள் மற்றும் பீங்காய் சாமான்கள் என விதவிதமான பவுல் டம்பளர் பிளேட் பூந்தொட்டி மற்றும் மரத்தினால் ஆன கபோர்டு ஷேர் பவுல் சமையல் பொருட்கள் என பல விதமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது. பிறகு உள்ளே சென்றால் லக்னோ சிக்கன் வேலைப்பாடு கொண்ட சுரிதார், குர்தா, குஜராத் எத்னிக், பிளாக் பிரின்ட் டிரஸ் மெட்டிரீயல், ராஜஸ்தான் பந்தேஜ் சூட்ஸ், ஸ்கர்ட், துப்பட்டா, பஞ்சாப் பாட்டியாலா, புல்காரி ஆடைகள், மத்திய பிரதேச சந்தேரி சல்வார், மகேஸ்வரி சல்வார் போன்ற கலைநயமிக்க கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பலவிதமான ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றது.

இதுபோக, ராஜஸ்தான் நகைகள் ஆன ஜிமிக்கி வளையல் தோடு மூக்குத்தி, கம்மல், கொண்டை கிளிப் போன்ற வெரைட்டியான டிசைன்களும் மரத்தினால் செய்யப்பட்ட விளையாட்டு சாமான்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.மேலும் காலையில் 10:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரை இருக்கக்கூடிய இந்த கண்காட்சி வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொதுமக்களின் வருகை அதிகமாக இருப்பதினால் பிப்ரவரி 3 வரை அதாவது வருகின்ற திங்கட்கிழமை வரை இந்த கண்காட்சிகள் நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.வெளி மாநில பொருட்களை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த வார இறுதிக்குள் இந்த கண்காட்சிக்கு சென்று வரலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க


நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *