Last Updated:

அடுத்தடுத்து வரும் சுபமுகூர்த்தத்தை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூவின் விலை 4200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

மதுரை

மதுரை மல்லிகைப்பூ

மதுரையில் எப்பொழுதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய பகுதிகளில் ஒன்றுதான் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட். மதுரையின் அடையாளம் மற்றும் தனிச் சிறப்புகளில் ஒன்றாக இருக்கக்கூடியது தான் மதுரை மல்லிகைப் பூ. மதுரை மல்லிகைப் பூவிற்கு என்று மக்கள் மத்தியில் தனியிடம் இருப்பதற்கு இப்பூவின் மனம் மற்றும் தன்மை காரணம்.

உசிலம்பட்டி, சத்திரப்பட்டி, கொட்டாம்பட்டி போன்ற பகுதிகளிலிருந்தும் வெளி மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற பகுதிகளிலிருந்தும் பூக்கள் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்தைப் பொருத்தும், விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பொருத்தும் மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும்.இந்த நிலையில் தொடர் சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் விலை திடீரென்று அதிரடியாக உயர்ந்து காணப்படுகின்றது. அதாவது ரூ.500 முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மதுரை மல்லிகைப் பூ தற்பொழுது சுமார் 4200ரூபாய்க்கு அதிரடியாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அதேபோல், மெட்ராஸ் மல்லி ரூ.1,500, பிச்சி ரூ.2,000, முல்லை ரூ.2000, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.2,000, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.230, பன்னீர் ரோஸ் ரூ.300, கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.250, தாமரை (ஒன்றுக்கு) ரூ.15விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ மற்றும் ஒரு சில விளைச்சல் மிகவும் குறைவாக உள்ள காரணத்தினாலும் தொடர்ந்து வரும் சுப முகூர்த்த தினங்களை முன்னிட்டும் மல்லிகை பூவின் விலை தற்பொழுது அதிரடியாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க


நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *