ஆனால் ஆஃப் ரோடு ட்ராக்கில் பைக்கில் சீறிச் சென்று காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் இந்த சின்னஞ்சிறு பாலகன்… நாமெல்லாம் 8 வயதில் பொம்மை பைக், கார் போன்றவற்றைக் கொண்டு விளையாடியிருப்போம். கோவையைச் சேர்ந்த 8 வயதான ரிதின் சாய் என்ற சிறுவன் பைக் ரேஸில் 7 உலக சாதனையைப் படைத்திருக்கிறார்.
இது குறித்து ரிதின் சாய் கூறுகையில், “நான் SNV குளோபல் ஸ்கூல்ல படிக்கிறேன். இதுவரைக்கும் நான் 9 நேஷனல் ஈவன்ட் ஓட்டி இருக்கிறேன். 1 இன்டர்நேஷனல் போட்டியில் ஓட்டியிருக்கிறேன். கலாம் வேர்ல்டு ரெக்கார்ட், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட், இன்ஃப்ளுயன்ஸ் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட், வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட், சூப்பர் டேலண்டர் கிட், இன்ஃப்ளுயன்சர் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ளேன்.
இதையும் படிங்க: Sea Erosion: கடல் அரிப்பால் மறையும் திருச்செந்தூர் கடற்கரை… மண் அரிப்பை தடுக்க தீர்வு என்ன…
எனக்கு எங்க அப்பா 2020-ல் எனக்கு 5 வயது ஆகும் போது என்னை ஒரு ரேஸ் பார்க்க கூட்டிட்டு போனார். அப்போ என்கிட்ட, நீ ரேஸ் ஓட்டுறியான்னு கேட்டார். நானும் சரி ஓட்டுகிறேன் என்று சொன்னேன். எல்லோரையும் முந்தி வந்து நான் முதலில் வரவேண்டும் இது என்னுடைய ஆசை” எனத் தெரிவித்தார்.
இது குறித்து ரிதின் சாய் தந்தை ஆனந்த குமார் கூறுகையில், “நான் 13 வருடம் ரேசிங் ஃபீல்டில் இருந்தேன். 2013-இல் நான் வெளியில் வந்து விட்டேன். நான் என் பையனுடன் சேர்ந்து ரேஸ் பார்க்கும் பொழுது நீ ஓட்டுறியான்னு கேட்டேன், அப்போது அவன் சரி என்று சொல்லி மிகவும் ஆர்வமாக இருந்தான். 2022-இல் நாங்கள் அவனை இதற்குள் கொண்டு வந்தோம். அப்போது அவனுக்கு ஐந்தரை வயது.
பாக்கர் பைக்கில் இருந்து 50cc பைக், இப்போது 65cc பைக் ஓட்டிக் கொண்டு இருக்கிறான். இப்போது அவனுக்கு 8 வயது ஆகிறது. இப்போ வரைக்கும் அவனுக்கு ffsc லைசென்ஸ் என்று எதுவும் இல்லை. பத்து வயதுக்கு மேல் லைசென்ஸ் எடுத்து ரேஸ் ஓட்ட வேண்டும். நான் தான் அவனுக்கு பயிற்சி கொடுத்து வருகிறேன். 10 வயதிற்குள் அவனை சாம்பியன் ரவுண்டிற்கு தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
இதையும் படிங்க: Fish Fry Business: மீன் விற்பனையில் ரூ.1.50 லட்சம் வரை வருமானம்… கடற்கரையில் கடை போட்டு அசத்தும் பெண்கள்…
எங்களுக்கு டீம் த்ராட்லர் ஸ்பான்சர் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். எங்களுக்கு மெக்கானிக்கல் உதவிக்கு செந்தில் என்பவர் உதவுகிறார். டீம் த்ராட்லெர்ஸ் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள். ஒரு பயிற்சி முடிந்ததும் பைக்குக்கு சர்வீஸ் செய்துதான் அடுத்த முறை ஓட்ட வேண்டும். அதற்கு செந்தில், ரமேஷ் என்பவர்கள் உதவி வருகிறார்கள்.
நான் 1999-இல் இந்த ரேசிங் ஃபீல்டில் ஸ்டார்ட் பண்ணினேன். 2013 வரை. ஒரு சாம்பியன்ஷிப் வென்று இருக்கிறேன். எனக்கு ஒரு விபத்து நடந்ததால் அதிலிருந்து நான் விலகி விட்டேன். என் பையனை அதே இதில் சூப்பர் கிராஸ் ஈவன்டில் கொஞ்சம் மேலே கொண்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன்.
அவனுடைய பள்ளியிலும் அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். அவனுக்கு எஸ்.என்.வி. குளோபல் ஸ்கூல் முழுவதும் ஸ்காலர்ஷிப் கொடுத்திருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் எங்களுக்கு பின்னால் இருந்து நிறைய பேர் உதவி வருகிறார்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி.
இதையும் படிங்க: Thoothukudi Night Club: ஊர்ல எங்க பாத்தாலும் நைட் கிளப் தான்… சிறியவர் முதல் பெரியவர் வரை இதான் ஃபேவரைட்…
இந்த மோட்டார் ரேசிங் என்பது கோயம்புத்தூர் தான் இதற்கு பேஸ் என்று சொல்லலாம். ஆட்டோ கிராஸ், டர்ட் பைக் ரேசிங், பைக் பிரிப்பரேஷன் ஆகியவற்றில் 1980-இல் இருந்தே கோயம்புத்தூர் தான் இதற்கு முதல் பேஸ் என்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அது கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் சென்றுள்ளது. சவுத் சைடு பார்த்தால் கோயம்புத்தூர் தான் டர்ட் பைக் பிரிப்பரேஷன், ஆல்டரேஷன் எல்லாத்துக்கும் பேஸ் ஆக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து சிறுவனின் அம்மா சோனா ஆனந்த் குமார் கூறுகையில், “நாங்கள் கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருக்கிறோம். என் மகன் பெயர் ரிதின் சாய். ஒரு டர்ட் பைக் ரேஸர். இதுவரைக்கும் அவன் 34 ஈவன்ட் ஓட்டியிருக்கிறான். 31 போடியம் பண்ணியிருக்கிறான். 9 நேஷனல் 1 இன்டர்நேஷனல். 2024 இல் இலங்கையில் விளையாடினான். இவன் மிகவும் துருதுருப்பானவன். அவனுடைய எனர்ஜியை குறைப்பதற்கு இந்த ஸ்போர்ட்ஸ் அமைந்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
எவ்வளவு நேரம் ஓட்ட வேண்டும் என்றாலும் ஓட்டுவான். ஏழு உலக சாதனை படைத்திருக்கிறான். எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை அவனை இன்டர்நேஷனல் அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசை. இதற்கு முன்னால் 50cc பைக் ஒட்டிக் கொண்டிருந்தான். இப்பொழுது அவன் 65 cc பைக்கில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Coimbatore,Tamil Nadu
February 02, 2025 10:38 AM IST
