இந்த தன்னார்வலர் அமைப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பில் முதன் முதலில் கோடைக் காலத்தில் மக்களுக்கு மோர் கொடுக்கலாம் என்று தான் ஆரம்பிக்கப்பட்டது. கோடை காலத்திற்குப் பிறகு மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி உணவு வழங்க முடிவு செய்து, அதை 5 ரூபாயில் தரலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.
இந்த பகுதியில் வேலை செய்பவர்களும், கல்லூரியும் அருகில் இருப்பதால் சுமார் ஒரு நாளைக்கு 300 இல் இருந்து 350 பேர் வரை சாப்பிட்டுச் செல்கின்றனர். தயிர் சாதம் இங்கு நாள்தோறும் கிடைக்கும். அத்துடன் சாம்பார் சாதம் அல்லது வெரைட்டி ரைஸ் என நாள் ஒன்றிற்கு ஒன்று வழங்கப்படும்.
இதையும் படிங்க: Sea Erosion: கடல் அரிப்பால் மறையும் திருச்செந்தூர் கடற்கரை… மண் அரிப்பை தடுக்க தீர்வு என்ன…
மேலும், 10 நாட்கள் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை வெள்ளை சாதம், சாம்பார், ரசம் எனவும் வழங்கப்படும். விழா நாட்களில் ஏதாவது ஒரு இனிப்பு பலகாரமும் இங்கு வழங்கப்படுகிறது. இங்கு சாப்பிடும் சாப்பாட்டிற்கு அளவுகளே கிடையாது. எவ்வளவு சாப்பிட்டாலும் 5 ரூபாய் மட்டுமே.
இங்கு வயதானவர்கள் முதல் வேலை செய்பவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் இங்கு உணவருந்திப் பயனடைகிறார்கள். ஆண், பெண் என்று இல்லாமல் இருபாலரும் இங்கு வந்து சாப்பிட்டு பயன் பெறுகிறார்கள். இதுகுறித்து அங்கு உணவு அருந்தும் மக்கள் கூறுகையில், ”என் பெயர் குமார். நான் இங்கு ரொம்ப நாளாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
ரமேஷ்குமார் என்பவர், ”நான் பொள்ளாச்சி. இரண்டு மூன்று தடவை இங்கு வந்து சாப்பிட்டு இருக்கிறேன். இந்த சேவை அருமையான சேவை. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்” என்றார். துரைராஜ் என்பவர், ”5 ரூபாய்க்கு உணவு கொடுக்கிறார்கள். வாரத்தில் ஒருமுறை சாப்பாடு, குழம்பு, ரசமும் போடுகிறார்கள். ரொம்ப நன்றாக இருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: Fish Fry Business: மீன் விற்பனையில் ரூ.1.50 லட்சம் வரை வருமானம்… கடற்கரையில் கடை போட்டு அசத்தும் பெண்கள்…
ராமசாமி என்பவர், ”நான் செக்யூரிட்டியாக வேலை செய்கிறேன். எப்போதும் நான் இங்கு வந்து தான் சாப்பிடுவேன். குறைகள் எதுவும் கிடையாது” என்றார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரிலிருந்து வந்திருந்த பெண்மணி கூறுகையில், “நாங்கள் நேற்று இருந்து இங்கு சாப்பிடுகிறோம். இன்றும் சாப்பிட்டோம். சாப்பாடு எல்லாம் நன்றாக இருக்கிறது. 5 ரூபாய் சாப்பாடு என்கிறார்கள், சாப்பாடு நன்றாகவே உள்ளது.
காசு இல்லாத நேரத்தில் கூட இங்க வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இது ரொம்பவும் பயனளிக்கும். இங்க சாப்பாடு நன்றாக இருக்கிறது. நம்ம வீட்டு சாப்பாடு மாதிரியே நன்றாக இருக்கிறது. இங்கு சாம்பார், ரசம் எல்லாமே நன்றாக இருக்கிறது” என்றார்.
வெங்கடாசலம் கூறுகையில், “நான் ஒரு மாதமாக இங்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். சாப்பாடு எல்லாம் நன்றாக இருக்கிறது. இங்கு கொடுக்கிற மாதிரி 5 ரூபாய்க்கு சாப்பாடு எங்கும் கிடைக்காது. சுத்தமாக, தரமாக போடுறாங்க. இங்கு எல்லாரும் சாப்பிட்டுவிட்டுச் செல்கிறார்கள். கல்லூரி பசங்க எல்லாரும் சாப்பிட்டுச் செல்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Coimbatore,Tamil Nadu
February 02, 2025 11:51 AM IST
Unlimited Food for Rs 5: அள்ளஅள்ளக் குறையாத அட்சய பாத்திரம்… கோவையில் வெறும் 5 ரூபாய்க்கு அன்லிமிடெட் சாப்
