Last Updated:
Covai Citizen: கோவை சிட்டிசன் செயலில் மூலம் பொதுமக்கள் பல சேவைகளை பெறுவதுடன்புகாரும் அளிக்க முடியும்.
கோவை மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நம்ம கோவை சிட்டிசன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகப் புகார் அளித்து, விரைவில் தீர்வு பெற முடியும்.
மேலும், மக்கள் இந்த செயலி மூலம் இருப்பிடத்துக்கு அருகிலுள்ள நிகழ்வுகள், முக்கிய தகவல்கள் போன்றவை அறியும் வசதியும் உள்ளது. பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களும் நகர மேம்பாட்டில் ஈடுபட இந்த செயலி உதவுகிறது. சொத்து வரி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு போன்ற சேவைகளைப் பெறுவதற்கான இணைப்புகளும் இதில் வழங்கப்படுகின்றன.
பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், போலீஸ் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் போன்ற முக்கிய இடங்கள் பற்றிய தகவல்களும் இதில் கிடைக்கும். மேலும், கலையரங்கம், சமுதாய நல கூடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றை முன்பதிவு செய்யும் வசதி இணையதள மூலமாக ஏற்படுத்தப்படும்.
இதையும் படிங்க: Sea Erosion: கடல் அரிப்பால் மறையும் திருச்செந்தூர் கடற்கரை… மண் அரிப்பை தடுக்க தீர்வு என்ன…
சுற்றுலா இடங்கள் மற்றும் அவற்றைப் பற்றிய தகவல்களையும் இந்த செயலி வழங்கும். பொதுமக்கள் பதிவு செய்யும் புகார்கள் நேரடியாக அதிகாரிகள் கவனத்துக்குச் சென்று, தீர்வு காண உதவும். இந்த செயலி விரைவில் அறிமுகமாகும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Coimbatore,Tamil Nadu
February 01, 2025 7:32 PM IST

