Last Updated:
Cyber Crime: பெருகி வரும் சைபர் மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
உலகில் தொழில்நுட்பங்கள் வளர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் செல்போனால் உள்ளங்கையில் அடங்கி வருகிறது. இதில் எவ்வளவு நல்லது இருக்கிறதோ அதே அளவு பாதகமான பின்விளைவுகளும் உள்ளன.
நாளுக்கு நாள் டிஜிட்டல் பரிவர்த்தனை பெருகி வரும் நிலையில் ஆன்லைன் மூலம் பண மோசடியும் பெருகி வருகிறது. பண பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாவதால் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் பயன்பாடு எளிதாகி இருக்கும் நிலையில், ஆன்லைன் நடைபெறும் சைபர் மோசடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் ஒருபுறம் பெருகி வருகிறது.
இந்த சைபர் மோசடிகளால் நன்கு படித்து, விவரம் தெரிந்தவர்கள் கூட ஏமாறும் நிலை உள்ளது. பெருகிவரும் சைபர் மோசடிகள் மீது நடவடிக்கை காவல் துறையில் தனியாக சைபர் குற்றப்பிரிவும் இயங்கி வருகிறது. இவர்கள் சைபர் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
கோவையில் சைபர் மோசடிகள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில் கோவை மாநகரக் காவல்துறை சைபர் மோசடி குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் மும்பை சைபர் கிரைம் போலீஸ் போல அடையாளம் தெரியாத ஒரு நபர் தொடர்பு கொண்டு மோசடி செய்வது குறித்த காட்சிகள் பதிவு பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கண்ணால் காண்பதும் பொய்!!…காதால் கேட்பதும் பொய்!!…தீர விசாரிப்பதே மெய்!! என எனக் கூறி பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.மேலும் சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிலும், www.cybercrime.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Coimbatore,Tamil Nadu
February 03, 2025 9:45 AM IST
