தோலினால் செய்யப்பட்ட இந்த இசை கருவியை இவர்கள் தான் இசைக்க வேண்டும், இவர்கள் தான் இதை இசைப்பார்கள், இது ஒடுக்கப்பட்டவர்களுக்கானது என்ற எண்ணத்தை மாற்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் கலை வடிவமாகப் புத்துயிர் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றனர் நிகர் கலைக்கூடத்தினர்.

நிகர் கலைக்கூடத்தின் இந்த பறை பயிற்சி வகுப்பில் சாதி, மதம், இனம், நிறம், பாலினம் என்று ஒரு வேற்றுமையும் கிடையாது. இது தான் நிகர் கலைக்கூடத்தின் முதன் நோக்கம் என்று தெரிவிக்கிறார்கள் அங்குள்ள மாணவர்கள்.

இதையும் படிங்க: குழந்தைகளைக் காக்க எடுத்த முடிவு… முத்திரை பதிக்கும் நீலகிரியின் முதல் பெண் நடத்துநர்…

இது குறித்து இந்த நிகர் கலை கூட நிறுவனர் ஸ்ரீ கூறுகையில், “நிகர் கலைக்கூடத்தை 2018இல் ஆரம்பித்தோம். இதனை ஆரம்பித்ததன் நோக்கம் அனைவரும் சமம், இங்கு இருக்கும் கலைகளும் சரி, கலைஞர்களும் சரி அனைவரும் சமம் என்று தான் நினைக்கிறோம்.

சாதி சார்ந்து, மொழி சார்ந்து, நிறம் சார்ந்து, இனம் சார்ந்து, பாலினம் சார்ந்து, வர்க்கம் சார்ந்து ஒடுக்க பட்டவர்களுக்கு ஒரு குரல் தேவை படுகிறது. அவர்களுக்குக் கொடுக்கும் குரல் கலையின் வழியாக இருக்க வேண்டும் என்று இதை ஆரம்பித்தோம்.

முதல் முறையாக இந்த குழு ஆரம்பிக்கும் பொழுது 12 பேர் தான் இருந்தார்கள். இப்போது 100 இருந்து 150 பேர் வரை இருக்கிறார்கள். குறிப்பாக இதில் பாதிக்கும் மேல் பெண்கள் தான் இருக்கிறார்கள். இதில் குறிப்பாக அந்த பெண்களுக்குப் பறை என்றால் அனைவருக்குமான ஒன்று தான் என்று அவர்களுக்குப் புரிய வைத்து பிறகு அவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொள்கிறார்கள்” என்றார்.

இதையும் படிங்க: Dirt Bike Racing: நான் பாஞ்சா புல்லட்டு தான்… 8 வயசில் எத்தனை சாதனைகள்… பைக் ரேஸில் கலக்கும் சிறுவன்…

இதுகுறித்து சந்திரிகா கூறுகையில், “நான் கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ் இல் ரிசர்ச் செய்து கொண்டிருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் தனியார் பள்ளியில் முதன்மை லெக்சரர் ஆக இருக்கிறேன். நான் பறை கற்கும் பொழுது 2 – 3 பேர் தான் பெண்கள் இருந்தோம். இப்போது பாதிக்கும் மேல் பெண்கள் தான் இருக்கிறார்கள்.

பறை என்றால் ஒரு தீண்டத்தகாத ஒரு கருவியாகவும், அதை ஆண்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்றும் கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் இப்போது எங்கள் குழுவில் 100க்கும் மேல் பெண்கள் இருக்கிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகப் பார்க்கிறோம். 5 வயதிலிருந்து 50 வயது வரை இருப்பவர்கள் அனைவரும் சமமாக இருந்து இதை கற்றுக் கொள்கிறார்கள்.

எந்த ஒரு வயது வரம்பும் இல்லாமல் கற்றுக் கொண்டும் கற்றுக் கொடுத்தும் கொண்டும் இருக்கிறார்கள். எங்களை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் பறை வாசிக்கும் இடத்தில் எங்களுக்கு விருதுகள் வழங்கப்படும் அது எங்களை மிகவும் ஊக்குவிக்கும்” என்றார்.

இதையும் படிங்க: Coonoor Clock Tower: கரண்ட் இல்லாம கரெக்டா டைம் காட்டும்… ஸ்விட்சர்லாந்து டெக்னாலஜியில் குன்னூர் மணிக்கூண்டு…

மேலும் ஸ்ரீ தொடர்கையில், “ஆதியில் மனிதர்கள் வேட்டையாடிய போது மொழி என்பது கிடையாது. இன்று இருக்கிற தொலைப்பேசி போன்று தான் அந்த காலத்தில் பறை என்பது. பறை என்கிற வார்த்தைக்குப் பேசுதல், சொல்லுதல், அறிவித்தல் என்று பொருள். பெரும். இதற்கு உதாரணம் மலையாளத்தில் பரா என்றால் பேசுங்கள் சொல்லுங்கள் என்று அர்த்தம். ஒரு கருத்தைச் சொல்லுவதற்கு அறிவிப்பதற்கும் பயன்படுத்தியது தான் இந்த பறை.

இந்த பறை மொழிகள் இல்லாததால் காலத்திலிருந்து, அரசர்கள், போர் வீரர்கள் என அனைவர் வீட்டிலும் இருந்திருக்கிறது. ஆனால் இன்று இதை சாவிற்கு இசைக்கப் படும் கருவி என்று தவறான புரிதலில் இருக்கிறார்கள் ஆனால் அது கிடையாது.

இப்பொழுது ஆப்ரிக்காவில் பார்த்தீர்கள் என்றால் அங்கு பயன்படுத்தும் drum ஆதியில் நாம் வேட்டையாடியதின் தொடர்ச்சி தான். இந்தியாவில் இருக்கும் பறையாகட்டும் ஆப்பிரிக்காவில் இருக்கும் drum ஆகட்டும் ஒத்த வடிவம் தெரியும். ஆதியில் வேட்டை ஆடியதால் அதிக தோல் கிடைத்தது. கிடைத்த அனைத்துத் தோள்களையும் இசை கருவி செய்ய பயன்படுத்தினார்கள்.

இதையும் படிங்க: Sea Erosion: கடல் அரிப்பால் மறையும் திருச்செந்தூர் கடற்கரை… மண் அரிப்பை தடுக்க தீர்வு என்ன…

தாங்கள் உடுத்தியது போக மீதம் உள்ளதைக் கொண்டு இசை கருவி செய்வார்கள். வேட்டையாடிய பிறகு அந்த உணவை உண்டு அனைவரும் ஒன்று கூடி, அவர்கள் செய்த இசை கருவிகளை இசைத்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

இது குறித்து சுரேஷ் கிருஷ்ணன் கூறுகையில், “நான் நிகர் கலைக் கூடத்தில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். இந்த வகுப்பு மாதத்தில் இரண்டு முறை நடக்கிறது. இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறு வகுப்புகள் நடைபெறும். காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.

பறை, துடும்பு என இரண்டும் பயிற்சி கொடுத்து வருகிறோம். இது மட்டும் இல்லாமல் எழுத்தாளர்கள், கவிஞர்கள் அவர்களை வர வைத்து ஒரு வகுப்பு நடைபெறும். மேலும், புத்தகங்கள் படித்து அதில் அவர்கள் புரிந்ததை வைத்து கருத்துகள் தெரிவிக்கும் வகுப்புகளும் நடைபெறும்.

இதையும் படிங்க: Natural Compost: விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு உரம்… இறைச்சிக் கழிவை இயற்கை உரமாக்கும் குன்னூர் நகராட்சி…

இந்த பறையைத் தூக்கி ஆடும் வகையில் இருக்கும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இங்கு வகுப்பில் இருக்கிறார்கள். இந்த வகுப்பில் பிரின்சிபால், டாக்டரேட், ஆர்கிடெக்ட் மற்றும் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் கலந்து இந்த வகுப்பில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த வகுப்பில் பறை பயிலும் மாணவர்கள் கூறுகையில், “என் பெயர் அன்பு. நான் 12 ஆம் வகுப்பு படிக்கிறேன். 6 வருடமாகப் பறை கற்றுக்கொண்டு இருக்கிறேன். கலைத் திருவிழா என்ற நிகழ்வில் கலந்து கொண்டு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முதலிடம் பிடித்திருக்கிறேன்” என்றார்.

மற்றொரு மாணவர் வேதா கூறுகையில், “நான் 8ஆம் வகுப்பு படிக்கிறேன். 2ஆம் வகுப்பிலிருந்து நான் பறை கற்றுக்கொண்டு இருக்கிறேன். எனக்கு இசை, ட்ரம்ஸ் போன்றவற்றில் ஆர்வம் அதிகம். என் அம்மாவிடம் கேட்டேன் ட்ரம்ஸ் வேணும் என்று அதற்கு அம்மா தான் பறை கற்றுக்கொள் என்று சொன்னார்கள். இப்பொழுது 6 வருடமாக கற்றுக்கொண்டும், கற்றுக் கொடுத்தும் வருகிறேன். எங்கள் பள்ளியில் பறை என்றால் எல்லாருக்கும் நான் தான் ஞாபாகம் வருவேன் அந்த அளவிற்குப் பறை என்னை மாற்றி உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Artichoke Soup: இதய அடைப்பை சரி செய்ய இந்த சூப் போதுமா… நீலகிரியில் இந்த காய்க்கு தான் இப்போ டிமாண்ட்…

மாணவர் சரவணன் கூறுகையில், “நிகர் பறை பயிற்சி பள்ளியில் ஒரு வருடமாகப் பயின்று கொண்டு இருக்கிறேன். பறை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. எனக்கு 58 வயது ஆகிறது ஆனால் இங்கு இருப்பவர்கள் அனைவரும் கல்லூரி மற்றும் பள்ளி செல்பவர்கள். இங்கு என் வயதை பொருட்படுத்தாமல் எங்களுக்கு நிகராக பயிற்சி கொடுத்து வருகிறார்கள். நிகருக்கு நிகர் இல்லை” என்றார்.

மாணவர் ஐஸ்வர்யா கூறுகையில், “பறைக்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. நான் தனியா இருக்கேன் என்று உணரும்போது பறை நான் இருக்கேன் என்று பேசுவது போன்று இருக்கும். அதே போல் தான் நிகர் கலை கூடமும். தனியாக இருப்பதாக உணரும் போது இங்கு வந்தால் எல்லாரும் ஒன்றாக இருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.

மாணவர் தர்ஷனா, “6 வருடங்களாக பறை கற்றுக்கொண்டு இருக்கிறேன். 12 வருடங்களாக பரதம் கற்றுக் கொண்டு இருக்கிறேன். பரதம் உயர்ந்த கலையாகவும், பறையை தாழ்ந்த கலையாகவும் பார்ப்பதை முறியடிக்க வேண்டும் என்று நிகர் கலைக்கூடம் முக்கியமாக இரண்டையும் இணைத்து நிறைய நிகழ்வுகளை செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *