Last Updated:

Coimbatore Mini Bus Service: பயணிகள் வசதிக்காகக் கோவையில் மீண்டும் மினி பஸ் உலா வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

கோவைக்கு

கோவைக்கு மீண்டும் வருது மினி பஸ் சேவை… மே 1 முதல் பயணிகள் பவனி வரலாம்…

கோவையில் உள்ள கிராமங்கள் மற்றும் குக்கிராமங்கள் போன்ற இடங்களில் குடியிருப்பு நிறைய உள்ள பகுதிகளுக்கு, சாலைப் போக்குவரத்து வசதிகளை வழங்கும் வகையில், புதிய மினி பஸ் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மினி பஸ் திட்டத்தை, உடனடியாகச் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மினி பஸ்சிற்கான பயணச் சீட்டு விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மே 1ஆம் தேதி முதல் இந்த மினி பஸ் சாலைகளில் இயங்கப் போகிறது எனக் கூறப்படுகிறது.

இந்த மினி பஸ்கள் இயக்கப்படும் அதிகபட்சத் தூரம் 25 கி.மீ. குறைந்தபட்சம் 65 சதவீத தூரம் மற்ற பஸ்களின் சேவை இருக்கக்கூடாது. பஸ் புறப்படும் இடம், சேரும் இடம் ஆகியவை பஸ் சேவை இல்லாத கிராமமாக இருப்பது அவசியம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

உங்கள் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

பழைய மினி பஸ் திட்டத்தில், ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள், இந்தப் புதிய திட்டத்தின் கீழ் மாற்றம் செய்து கொள்ள விண்ணப்பம் செலுத்தி பழைய பர்மிட்டை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் புதிய பாதையில், பஸ் சேவை இல்லாத பாதை குறைந்தபட்சம் 1.5 கி.மீ தூரம் இருப்பது முக்கியம். அந்த மினி பஸ்சில் 25 சீட் இருக்க வேண்டும். மினி பஸ்சின் சக்கர அளவு 390 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும்.

பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் மினி பஸ் செல்லும் பாதைகளை வரைபடமாக வரைந்து விண்ணப்பத்துடன் இணைத்து அவர்கள் எல்லைக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *