Last Updated:
திருவள்ளுவர் வேடமணிந்து திருக்குறள் ஒப்புவித்த மாணவர்கள் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளனர்.
35 திருக்குறள் மற்றும் தமிழ் பழமொழிகளை 5 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த குழந்தைகள்.
கோவையில் நம் தமிழ் மொழியின் பெருமைகளைக் கூறும் வகையில் திருவள்ளுவர் வேடமணிந்த 40 குழந்தைகள் திருக்குறள் மற்றும் பழமொழிகளைக் கூறி லிங்கன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
கோவை நீலாம்பூர் பகுதியில் தமிழ் மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அங்குரம் பாடசாலா இயங்கி வருகிறது. இந்நிலையில் உலகப் பொதுமறையான திருக்குறள் மற்றும் தமிழ் நன்னெறி நூல்கள் மற்றும் பழமொழிகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி 83 மழலை பள்ளி மாணவ மாணவிகள் 5 நிமிடத்தில் 35க்கும் அதிகமான திருக்குறள் மற்றும் பழமொழிகளை உடல் மொழி அசைவுகளோடு சொல்லி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: Dirt Bike Racing: நான் பாஞ்சா புல்லட்டு தான்… 8 வயசில் எத்தனை சாதனைகள்… பைக் ரேஸில் கலக்கும் சிறுவன்…
இந்த நிகழ்ச்சியில் 40 மாணவர்கள் திருவள்ளுவர் போல வேடம் அணிந்து திருக்குறளைக் கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் லிங்கன் உலக சாதனைப் புத்தகத்தில் இந்த குழந்தைகள் இடம் பிடித்துள்ளனர்.
உலக சாதனை செய்த மழலை குழந்தைகளுக்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத் தலைவர் ஜோசப் இளந்தென்றல் ஆய்வு செய்து அங்கீகாரச் சான்றிதழ்களை வழங்கி குழந்தைகளைக் கவுரவித்தார். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Coimbatore,Coimbatore,Tamil Nadu
February 04, 2025 8:49 PM IST
