Last Updated:

Korean Style Photo Booth: ஃபோட்டோகிராபர் இல்லாமலே போட்டோஷூட் பண்ணும் வகையில் கோவை மாலில் வைக்கப்பட்டுள்ள புதிய ஏற்பாடு மக்களைக் கவர்கின்றது.

X

சென்னை,

சென்னை, பெங்களூருக்கு அடுத்து கோவை தான்… கொரியன் ஸ்டைலில் ஃபோட்டோ க்ளிக்கும் இளசுகள்…

பிடிஎஸ் விரும்பிகளும் கொரிய மக்களைப் போல் ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும் வசதி கோவையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள இளம் தலைமுறையினர் மத்தியில் கொரிய மோகம் அதிகரித்துள்ளது. கொரிய ஸ்டைல் உணவு, ஆடை என இளைஞர்களுக்கு பிடித்தமான இந்த பட்டியலில் தற்போது கொரியன் ஸ்டைல் ஃபோட்டோ பூத் இடம்பெற்றுள்ளது.

கோவை ஃபன் மாலில் தான் இந்த புதுமையான போட்டோ பூத் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோட்டோ பூத்தில் கொரியாவில் இருப்பது போன்று நமக்குப் பிடித்தது போல் நாமே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உங்கள் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

பெரும்பாலும் நாம் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் ஒரு ஸ்டுடியோவுக்கு சென்று புகைப்படம் எடுத்து போட்டோ நம் கையில் வர குறிப்பாக ஒரு அரை மணி நேரமாவது தேவைப்படும். ஆனால் இங்கு சென்றால் நமக்கு பிடித்ததை போன்று போஸ் கொடுத்து நாமேளே புகைப்படம் எடுத்து ஐந்து நிமிடத்திற்குள் நம் கையில் அந்த புகைப்படம் வந்து சேரும்.

இது குறித்து ஸ்டுடியோவைச் சேர்ந்தவர் கூறுகையில், “கோவையில் முதல் முறையாக கொரியாவில் இருப்பது போன்று ஒரு ஸ்டுடியோ செட் அப் நம் கோவையில் வைத்திருக்கிறோம். சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளில் வைத்திருக்கிறோம். இது கோவையில் முதல்முறையாக ஃபன் மாலில் வைத்திருக்கிறோம்.

இதில் புகைப்படம் எடுக்க 300 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த 300 ரூபாயில் 8 புகைப்படங்கள் கிடைக்கும். அதுவும் ஒன்றில் நான்கு மற்றொன்றில் நான்கு மொத்தம் எட்டு புகைப்படங்கள் கிடைக்கும்.

இதையும் படிங்க: Strong Man Kannan: 217 கிலோ ராட்சத மரக்கட்டை… அசால்ட்டாக தோளில் தூக்கி நடந்த ஸ்டார்ங் மேன் கண்ணன்…

இந்த ஸ்டுடியோவில் ஒரு கேமரா லைட் செட்டப் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன் நின்று நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். எந்த போஸ் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம். இதில் உங்களுக்கு பிடித்ததை செலக்ட் செய்து அதில் உள்ள பில்டரை தேர்வு செய்து புகைப்படம் பிரிண்ட் செய்து பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *